ஜல்லிக்கட்டு தடையா? மனத் தடையா?

இந்த ஜல்லிக்கட்டு தொடர்பாக எழும் கோஷங்களைக் கூர்ந்து கவனியுங்கள்…!

ஒருத்தன் கூட மறந்தும், "இது ஒரு கிராமிய, கோயில் திருவிழாவின் ஒரு பகுதியான விளையாட்டு" என்பதைக் குறிப்பிடுவதே இல்லை…! திரும்பத் திரும்ப 'நாட்டு மாடு பாதுகாப்பு…' இல்லைன்னா… 'தமிழனின் வீர விளையாட்டு…!'

"ஜல்லிக்கட்டு தமிழகத்தின் தென் பகுதியில், குறிப்பாக மதுரைக்கு தெற்கே உள்ள கிராமங்களில் மட்டும் நடத்தப்படும் விளையாட்டு…" எனில், மதுரையை ஒட்டி உள்ளவர்கள் மட்டும் தான் தமிழர்களா…? தமிழகத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா…?

அப்புறம் இந்த நாட்டு மாடு பஜனை… மதுரைக்கு தெற்கே உள்ள சில கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலமாகத் தான் காலங் காலமாக நாட்டு மாடுகள் பரமரிக்கப் படுகின்றனவா…? அப்போ தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் எல்லாம் நாட்டு மாட்டு இனத்தைப்பாதுகாக்கும் அக்கறை இல்லாதவர்களா…?

சொல்லப்போனால் இன்று தமிழகத்திலேயே கொங்குப் பகுதியில்தான் நாட்டு மாடு வளர்ப்பில் அதிக அக்கறை காட்டப்படுகிறது…!

உண்மை என்னவென்றால், இவை எல்லாம் தமிழர்களின் இறை வழிபாட்டை ஒட்டிய நிகழ்வுகள்…! சில இடங்களில் 'ஜல்லிக்கட்டு'.., சில இடங்களில் 'மஞ்சு விரட்டு'.., கொங்குப் பகுதியில் 'ரேக்ளா ரேஸ்…' மற்றும் 'மாட்டுத்தாவணி'…

இவை எல்லாவற்றுக்குமே உள்ள ஒற்றுமை என்னவென்றால், இந்த நிகழ்வுகள் எல்லாமே தமிழ் ஹிந்துக்களின் கோயில் வழிபாட்டை ஒட்டி நடத்தப்படுபவை…!

கொங்குப் பகுதியில் முன்பெல்லாம் ஊருக்கு ஊர் மாட்டுத்தாவணி [மாட்டுச்சந்தை] நடக்கும்…! எல்லாமே அந்தந்த ஊர் கோயில் திருவிழாக்களை ஒட்டி மட்டுமே நடக்கும்…!

இதன் தாத்பர்யம் என்னவென்றால், கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு, வரும்போது அப்படியே மாடு வாங்கி வருவது…! அப்படி கோயில் மாட்டுத்தாவணியில் மாடு வாங்கினால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை…!

இன்று அவை எல்லாம் வழக்கொழிந்து போய்… காங்கயம் அருகே உள்ள கண்ணபுரம் [மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நடைபெறும்] மாட்டுத்தாவணியும், அந்தியூர் குருநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் குதிரைச் சந்தையும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன…!

ஜல்லிக்கட்டும் அந்தந்த ஊர் கோயில் கோயில் திருவிழாக்களை ஒட்டித் தான் நடத்தப்படுகிறது…! வாடிவாசலில் முதலில் அவிழ்த்துவிடப்படுவது கோயில் காளைதான்…! அதை யாரும் பிடிக்க மாட்டார்கள்…!

"தமிழன் ஹிந்து அல்ல…!" என்று எப்படியாவது ஸ்தாபித்து விட நீண்ட காலமாக நடைபெறும் முயற்சியின் ஒரு பகுதி தான் இந்த 'சமத்துவப் பொங்கல், நாட்டு மாட்டை காப்பதற்காக [மட்டுமே] நடத்தப்படும் ஜல்லிக்கட்டு' போன்ற பிரச்சாரங்கள்…! அதாவது…

தமிழன் வேண்டும்…! ஆனால் அவனின் மத [ஹிந்து] அடையாளம் மட்டும் வேண்டவே வேண்டாம்…!

இப்போது ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகவேண்டும் என்று தூண்டி விடுபவர்களில் நூற்றுக்கு தொன்னூறு பேருக்கு உள்ளூர ஜல்லிகட்டு நடக்கூடாது என்ற எண்ணம்தான் இருக்கும்…! அப்போது தானே இதை ஒரு சாக்காக வைத்து தமிழர்களை நம் ஹிந்து தேசியத்துக்கு எதிராக திருப்ப முடியும்…?

இப்படியே நாட்டுமாடு பாதுகாப்பு, தமிழன் வீரம் என்று மட்டும் ஜல்லியடித்துக் கொண்டிருந்தால் , இன்னும் நூறு ஆண்டானாலும் ஜல்லிக்கட்டு நடத்தமுடியாது…!

"இது எங்கள் வழிபாட்டின் ஒரு பகுதி…! எங்கள் கிராம தேவதைக்கு நேர்ந்து கொண்டு நடத்தப்படும் நிகழ்வு…!எங்கள் மத நம்பிக்கையில் தலையிட எந்த சட்டத்திற்கும் அருகதை இல்லை…!" என்ற நிலையை நாம் எடுக்கவேண்டும்.

அப்படி நாம் உறுதியாக நின்றால், எந்த நீதிமன்றத்தையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை…! ஜல்லிக்கட்டு வழக்கின் இறுதிக்கட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி இந்த ரீதியில்தான் தன் வாதத்தை முன் வைத்திருக்கிறார்…!

அப்படி இல்லாமல் இந்த வெற்றுத் தமிழ் கோஷங்களையே நாம் எதிரொலித்துக் கொண்டிருந்தால் , காலம் முழுக்கக் கரடியாக கத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்… காரியம் நடக்காது…!

தமிழனைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் நம்மோடு நின்று கொண்டு , நம் கண்ணையே குத்திக் கொண்டிருப்பவர்களின் உண்மையான நோக்கமும் அது தான்…!!

நன்றி: கண்ணன் & சரவணக்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...