ஜல்லிக்கட்டுப் போராட்டம் – சில உண்மைகள்

1.உச்சநீதிமன்றம் தடை விதித்தபின் 2016 ஆண்டு , மத்திய அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக ஆணை வெளியிட்டது.

2. இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார். அனைத்து கட்சியினரும் பொன்.இராதாகிருஷ்ணனின் முயற்சியைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்

3. #மத்திய அரசின் ஆணைக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியது பெடா (#peta) அமைப்பு

4. இந்த நீதிமன்றத் தடைக்கு சில நாட்களுக்கு முன் ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ஆதரவுக் கடிதம் எழுதினார் முன்னாள் பிரதமர் திரு. #மன்மோகன் சிங் .

5. ஜல்லிக்கட்டை தடை செய்த பெருமை காங்கிரஸ் அரசையே சாரும். அதில் அங்கம் வகித்த கட்சிகள் தி.மு.க மற்றும் பா.ம.க , ஆதரவளித்தது விடுதலை சிறுத்தைகள்.

6. ஜல்லிக்கட்டை தடை செய்யக் காரணமானவர் முன்னாள் அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் என்று சொன்னவர் முன்னாள் #காங்கிரஸ் #அமைச்சர் திருமதி.ஜெயந்தி நடராஜன்

7. #பெடா வின் #ஜல்லிக்கட்டு வழக்கை எதிர்த்து, தமிழ் தேசியம் பேசும் எந்த அமைப்பும் #நீதிமன்றம் செல்லவில்லை. பா.ஜ.க தலைவர் திரு.சுப்பிரமணிய சாமி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வழக்கில் சேர்ந்தார்.

8. இந்த வழக்கில் தமிழக அரசோ , அல்லது தமிழ் இயக்கங்களே , #பாஜக வைத் தவிர ஏனைய கட்சிகளோ எந்த முனைப்பும் காட்டவில்லை

9. ஜல்லிக்கட்டு #சமயம் சார்ந்த #விழா என்ற அடிப்படை வாதத்தை இந்தப் போராடும் அமைப்புக்கள் இது வரை முன்வைக்க வில்லை. இந்த வாதம் சட்டத்தின் முன் பலமான வாதம் என்று தெரிந்தும், இதை இவர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள்.

10. ஜல்லிக்கட்டை ஒழித்த #காங்கிரஸ், அந்த அரசில் அங்கம் வகித்த #திமுக, #பாமக , ஆதரித்த #விடுதலை #சிறுத்தை' , நீதிமன்றத்தில் பெடாவை எதிர்க்கத் துப்பில்லாத அமைப்புக்கள் , எதுவும் செய்யாமல் இருக்கும் மாநில அரசை நிர்வகிக்கும் அ.தி.மு.க , இன்று ஜல்லிக்கட்டை காப்பாற்ற , ஜல்லிக்கட்டிற்காக அரசாணை பிரப்பித்து, நீதிமன்றப் போராட்டத்தில் ஈடபட்டிருக்கும் பா.ஜ.க வைக் #குற்றம் சாட்டுகிறார்கள்

பிக்பாக்கெட் அடித்தவன் திருடனைப் பிடி திருடனைப் பிடி என்று தப்பி ஓடுவதுடன் அப்பாவியைத் திருடனாக்கி அவனை அடிப்பது போல் உள்ளது இந்த #ஜல்லிக்கட்டுப் #போராட்டம் !

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...