ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை

மத்தியபட்ஜெட்டில் ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்ததடை ஏப்ரல் முதல் அமலுக்குவருகிறது.

கறுப்புப் பணத்தை மீட்க உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி ஷா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு மத்தியஅரசிடம் பல்வேறு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதில் பெருந் தொகை பணப் பரிவர்த்தனைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பட்ஜெட்டை தாக்கல்செய்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியபோது, சிறப்பு புலனாய்வுக் குழுவின் பரிந்துரைப்படி ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த தடை ஏப்ரல் முதல் அமலுக்குவரும் என்று தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக்குழு தலைவர் நீதிபதி ஷா கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்பு நல்லமுடிவு. பல்வேறு நாடுகளில் பெருந் தொகையிலான பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைபின்பற்றி இந்தியாவிலும் தடைவிதிக்க பரிந்துரைத்தோம். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேபோல தனி நபர் ரூ.15 லட்சத்துக்குமேல் ரொக்க பணம் வைத்திருக்கக் கூடாது என்றும் பரிந்துரை செய்திருந்தோம். அந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...