நாட்டில் மிகப் பெரும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் சட்டப் பேரவை நடைபெற இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடக்கிறது.
சட்ட சபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மீரட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்கூறியதாவது: -வறுமை,ஊழலை முடிவுக்கு கொண்டுவரவே நமது போராட்டம் நடக்கிறது. இங்கு பிரசாரத்தை துவக்குவது பெருமையாக உள்ளது. கடந்த 2.5 வருடங்களில், மோடி பெயரில் ஊழல்நடந்துள்ளதா?
மீரட்டில் வேலைக்கு செல்லும் மக்கள், உயிருடன் வீடுதிரும்பவது குறித்து அச்சப்படுகின்றனர். கொலைகாரர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில சட்ட ஒழுங்கு குறித்து விமர்சித்தவர்கள், தற்போது அதற்கு காரண மாணவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இது உடையும்கூட்டணி. அவர்கள் எவ்வாறு மாநிலத்தை காப்பாற்றுவார்கள்.
சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப் பவாத கூட்டணியாகவும் உள்ளது. தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாதவர்களால் எவ்வாறு உத்தர பிரதேசத்தை காப்பாற்ற முடியும். உத்தரபிரதேச மக்களே உங்களுக்கு என்ன வேண்டும் பாஜக.,வா? அல்லது ஊழலா? ஊழலுக்கு எதிராக பாரதீய ஜனதா போராடிவருகிறது. ஊழலை விரட்டி அடிக்கும்வரை உத்தரபிரதேசத்தால் நல்ல நாட்களை பார்க்கமுடியாது உத்தர பிரதேசத்தை புதிய உச்சத்து அழைத்துச் செல்ல உங்கள் ஆசிர்வாதத்தை கொடுங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.