'ஊழல் மற்றும் கறுப்புபணத்திற்கு எதிரான மத்திய அரசின் போராட்டம் தொடரும்,'' என, பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
ஒடிசா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சிதேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், உ.பி., சட்ட சபை தேர்தலையொட்டி, இங்குள்ள கோண்டா பகுதியில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டினார்.
குஜராத், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த உள்ளாட்சிதேர்தல்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளது. ஊழல் மற்றும் கறுப்புபணத்திற்கு எதிராக, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஊழலையும், கறுப்புபணத்தையும் வேரோடு சாய்க்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
மஹா சிவராத்திரி தினத்தில், மூன்றாவது கண்ணான அககண்ணை, மக்கள் பயன்படுத்தவேண்டும்; பல ஆண்டுகளாக, நாட்டை சுரண்டியவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை செயல் படுத்தும், பா.ஜ.,விற்கு ஆதரவளிக்க வேண்டும். பா.ஜ., பெரும்வெற்றி பெற மக்கள் ஓட்டளிக்கவேண்டும்; சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.