பிரதமர் நரேந்திரமோடி அறிமுகபடுத்திய பீம் மொபைல் ஆப்பை இந்தியா முழுவதும் 1.7 கோடிபேர் பதிவிறக்கம் செய்து உலகசாதனை படைத்துள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமைச்செயல் அதிகாரி அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு பரிவர்த்தனையை துரிதமாக்க பிரதமர் நரேந்திரமோடி பீம் ஆப்பை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப் படுத்தினார். முன்பு ஆண்ட்ராய்டு மொபைல்களில் மட்டுமே பீம் இயங்கி வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ஐஒஎஸ் தொழில்நுட்பம் கொண்ட ஆப்பிள் மொபைல்களிலும் இயங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இது வரை 1.7 கோடி நபர்கள் இதனை தரவிறக்கம் செய்திருப்பதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கன்ட் தெரிவித்தார்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.