ஹார்வர்டை விட ஹார்டு வொர்க்குக்கு சக்தி அதிகம்

ரூபாய் நோட்டுவாபஸ் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எவ்விதபாதிப்பும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ''ஹார்வர்டை விட ஹார்டு வொர்க் சக்தி அதிகம்'' என தெரிவித்தார்.

 

ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் நோட்டுவாபஸ் நடவடிக்கையை மேற்கொண்டார். பிரதமரின் அதிரடி நடவடிக்கை நாட்டில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாகின.
 

 

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொருளாதார பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென், ரூபாய் நோட்டுவாபஸ் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை வேரறுத்து விடும் என விமர்சித்திருந்தார். மேலும், இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தற்காலிகபாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
 

ஆனால் அதற்கு நேர்மாறான முடிவுகள் தற்போது வரத்துவங்கி உள்ளன. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு நாட்டின் ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி)வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட 7.1 சதவீத அளவை எட்டியிருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இது சீனாவின் 6.8 பொருளாதார வளர்ச்சியை விட அதிகமாகும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்தபோதிலும், பொருளாதாரத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா தன்னைமீண்டும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஞ் நகரில் இன்று (மார்ச் – 1) நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
 

ஒருபுறம் ஹார்வர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் என்ன சொன்னார்கள் (ரூபாய் நோட்டுவாபஸ் நடவடிக்கை தொடர்பான விமர்சனங்கள்) என்பதை பற்றி ஒருதரப்பினர் விவாதித்து கொண்டிருந்த வேளையில், மற்றொரு புறம் ஏழைதாயின் மகன் பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது என தனது கடின உழைப்பால் இயங்கிக் கொண்டிருந்தார். உண்மையை சொல்லப்போனால் கடின உழைப்புதான் (ஹார்டு வொர்க்) ஹார்வர்டு பல்கலைக் கழகத்தை விட சக்திவாய்ந்தது. அதன் காரணமாகவே நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தின் முதல் 5 கட்டதேர்தல்களில் பா.ஜ.,வின் வெற்றியை வாக்காளர்கள் உறுதிசெய்து விட்டனர். எஞ்சிய கட்டத் தேர்தல்களில் விழும்வாக்குகள் அனைத்துமே உபரியானவை. அன்பளிப்பு மற்றும் ஊக்கத்தொகை போன்றது. எனவே பா.ஜ.,வுக்கு ஊக்கத்தொகை வழங்க வாக்காளர்கள் முன்வரவேண்டும். காய்கறிகள் வாங்கி முடித்த பின், கடைக்காரர் அன்பளிப்பாக கொத்தமல்லி, கறிவேப்பிலை தருவதுபோல, எஞ்சிய இரு கட்டத் தேர்தல்களிலும் பா.ஜ.,வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...