அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது என பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டத்தின், முதல்நாளான நேற்று, லோக் சபா துவங்கியதும், பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச வேண்டுமென, உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 'அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டு கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்' என, எம்.பி.,க்கள் வலியறுத்தினர்.
இதற்கு பதிலளித்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ''அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது. இந்தபிரச்னையை, மத்திய அரசு மிகத்தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, அடுத்த வாரத்தில், பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.