உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகியமாநிலங்களில் பாஜக அமோக வெற்றியை பார்த்து எதிர் கட்சிகள் நடுங்கி போய் உள்ளனர் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நன்றி தெரிவிக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்பாக அசோகா சாலையில் மோடி பேரணியாக நடந்து வந்து பொதுமக்களின் வரவேற்ப்பை ஏற்றுகொண்டார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், பாஜகவின் வெற்றிக்காக, அடிமட்டஅளவில் அயராது பாடுபட்டு, மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த கட்சி தொண்டர்களுக்கு வணங்குகிறேன் பாராட்டுகிறேன். வளர்ச்சியையும், நல்லநிர்வாகத்தையும் எதிர்பார்த்து, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பாஜகவுக்கு கொடுத்த உத்தரப்பிரதேச மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் அனைவருக்கும் எனது ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். 5 மாநில பேரவைத் தேர்தல்களிலும் வாக்குசதவீதம் உயர்ந்திருப்பது நல்ல முன்னேற்றத்தை காட்டுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ச்சி என்பதுதான் முக்கிய பிரச்சனையாக உள்ளது. தேர்தல் முடிவுகள் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கி உள்ளது. பாஜகவுக்கு மக்கள் அளித்த அமோகவெற்றி அனைவரையும் தேர்தல் குறித்து ஆய்வு நடத்த வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக.,வின் அமோக வெற்றியை பார்த்து எதிர்கட்சிகள் நடுங்கிபோய் உள்ளனர் என்றார்.
மேலும், அதிகாரம் என்பது பதவியை பற்றியதல்ல, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு. தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏழைகள் வாய்ப்புகளை மட்டுமே விரும்புகிறார்கள் சலுகைகளை அல்ல.
5 மாநில பேரவைத்தேர்தலின் முடிவுகளுக்குப் பிறகு ஒருவிடியல் ஏற்பட்டுள்ளதை நான் காண்கிறேன். புதியஇந்தியா உருவாகி வருகிறது. இந்திய மக்களை வீழ விடமாட்டேன். ஏழைகளுக்கான வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என கூறினார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.