ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க வெற்றிபெற்றால், இந்த தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக் கொள்ளும் என்றும், தொகுதியின் வளர்ச்சிக்காக நான்பாடுபடுவேன் என்றும் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.
சென்னை கொருக்குப்பேட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய கங்கை அமரன், "கலையையும், பண்பாட்டையும், கலா சாரத்தையும் பாதுகாக்கக் கூடிய பா.ஜ.க-வில் நான் இணைந்தது வாழ்வில் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தியாவில் மேலிருந்து கீழ்வரைக்கும் படர்ந்து வந்துகொண்டிருக்கும் பா.ஜ.க என்ற சக்தி, தமிழ்நாட்டில் வர இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் என்னை வேட்பாளராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி.
மோடிஜி-யின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தது. என்னை வேட்பாளராக அறிவித்த நாள் முதல், பலர் என்னை தொலை பேசியில் அழைத்து, வாழ்த்து தெரிவித்துவருவது சந்தோஷமாக இருக்கிறது. வெற்றி வேட்பாளரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். கங்கை அமரன் முகத்துக்காக வேட்பாளர் அறிவிக்கவில்லை. என்னுடைய பிரச்னை சாதாரணம். மக்களைப்பற்றியே சிந்திக்கக்கூடிய பா.ஜ.க-வில் என்னை முன்னிலைப் படுத்தியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களுக்கு வேலைவாங்கித் தரக்கூடிய, இளைஞர்களை ஈர்க்கக்கூடிய, தமிழகத்தில் ஏற்படக்கூடிய ஒருஎழுச்சியின் ஆரம்பமாக இந்தத் தேர்தல் இருக்கும்.
இந்தத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் என்று கங்கை அமரன் கூறினார்.(அப்போது குறுக்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெறும் என்று கூறினார்) தொடர்ந்து பேசிய கங்கைஅமரன், பா.ஜ.க வெற்றிபெறும்,வெற்றிபெறும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்தத் தொகுதியை மத்திய அரசு தத்தெடுத்துக் கொள்ளும். நான் இந்தத் தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இந்தக்கட்சிக்காக எனது வாழ்க்கையைக் கொடுப்பேன். மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கக் கூடிய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பலத்தை இறைவனும், மோடிஜியும், அமித்ஷாவும், பொன்னார் ஆகியோர் கொடுக்கவேண்டும். அவர்களின் வழிநடத்துதல்படி எனது பணிதொடரும். இந்தத் தாெகுதியில் மக்களுக்கு எது செய்துதரப்பட வில்லையோ… அதை எனது முதல்முயற்சியாகச் செய்து தரப்படும். இந்தத்தொகுதியில், தண்ணீர் பிரச்னை தொடங்கி எல்லா பிரச்னைகளும் இருக்கின்றன. இந்தத்தொகுதியை பா.ஜ.க கைப்பற்றும் என்று கூறினார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.