ஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே முடங்கிப்போகும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான பாஜக தேர்தல் அலுவலகம் தண்டையார் பேட்டையில் நேற்று திறக்கப்பட்டது. பாஜக தேசியசெயலாளர் எச்.ராஜா, ஆர்கே.நகர் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்று தமிழக அரசியல் வரலாற்றில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும். எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டைஇலை சின்னத்தை பாதுகாக்கத் தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. இதனால் சின்னம் முடக்கப்பட்டது சரியானமுடிவு. தேர்தலுக்கு பின் அதிமுக முடங்கிப் போகும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாகக் கூறுபவர்கள் அடிப்படைஅரசியல் தெரியாதவர்கள். இரட்டைஇலை சின்னம் தோற்றுப் போகக் கூடாது என்பதற்காகத்தான் இயற்கையே இந்தச் சின்னத்தை முடக்கியுள்ளது.
ஆர்கே.நகர் இடைத் தேர்தலில் தமிழக பாஜகவினர் மட்டுமே பிரச்சாரம் செய்வோம். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபடுவார். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சிறையில் உள்ளார். 2ஜி வழக்கில் திமுகவினர் மீது நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். தேசியகட்சி தமிழகத்தில் காலூன்றும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.