நடந்து முடிந்த ஐந்துமாநில சட்ட சபை தேர்தல்களில் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பா.ஜ.க, . கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் சிறியகட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.
தொடர்வெற்றிகளால் மகிழ்ச்சியில் உள்ள பாஜக, இதே உற்சாகத்துடன் வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும்சந்திக்க தயாராகவே உள்ளது. இத்தேர்தலுக்கான முக்கியவியூகங்களை வகுப்பதற்காக பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் அடுத்தமாதம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற உள்ளது. இரண்டுநாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோசி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா, மேகாலயா மாநில சட்ட சபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றவும் பாஜக தீவிர முயற்சி எடுத்துவருகின்றது. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களை அமித்ஷா அவ்வப்போது நடத்தி வரும் நிலையில், அடுத்த மாதம் தேசியசெயற்குழு கூட்டம் நடைபெற இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.