கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற தசராவிழாவின் போது பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் குண்டு வைத்ததாக ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ம.பி., மாநிலம் ஜாப்ரி ரயில் நிலையத்தில், போபாலில் இருந்து உஜ்ஜைன்செல்லும் ரயிலில் கடந்த 7ம் தேதி குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஐ.எஸ்., பயங்கரவாதிகள 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருபயங்கரவாதி லக்னோவில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமதுதனிஷ், அதிப் முசாபர் என்ற பயங்கரவாதிகளிடம் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வைத்த அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்.,17ம் தேதி(17-10-2016) உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தசரா பண்டிகையை யொட்டி கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். மோடியை குறிவைத்து அக்கூட்டத்தில் பயங்கரவாதிகள் முகமது தனிஷ் மற்றும் அதிப்முசாபர் இருவரும் சொந்தமாக தயாரித்த குண்டு ஒன்றினை, குப்பைத் தொட்டி ஒன்றில் வைத்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அக்குண்டு வெடிக்கவில்லை.
இரு நாட்களுக்குப்பின் அந்தஇடத்தில் அவர்கள் மீண்டும் பார்த்த போது, சில மின் கம்பிகள் மட்டுமே கிடந்துள்ளன. இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதமரை குறிவைத்து ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குண்டுவைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.