அதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள வங்கதேச அதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வங்கதேச அதிபர் ஷேக்ஹசினா 4 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வருகை தரும் வங்கதேச நாட்டின் பிரதமர் என்பதால் அவரை சிறப்பான முறையில் வரவேற்க பிரதமர் நரேந்திரமோடி தீர்மானித்தார்.


இதையடுத்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்றுகாலை தனது காரில் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு மோடி புறப்பட்டுசென்றார். பிரதமரின் கார் செல்வதற்கான எவ்வித சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாத நிலையில் வழக்கமான இதரவாகனங்களுடன் இணைந்து வழக்கமான சாலை போக்குவரத்துக் கிடையில் பிரதமரின் கார் விமான நிலையத்தை சென்றடைந்தது.


அங்கு விமானத்தில் இருந்து இறங்கி வந்த ஷேக் ஹசினாவுக்கு மலர் கொத்து அளித்து பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார்.இந்நிலையில், டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை முப்படையினரின் அணி வகுப்பு மரியாதையுடன் ஷேக் ஹசினாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த வரவேற்பை ஏற்றுகொண்ட ஷேக்ஹசினா, டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்துக்கு சென்றார். காந்தி சமாதியின் மீது அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா- – பிரதமர் மோடி இடையே நடைபெறவுள்ள பல்வேறு சுற்று பேச்சு வார்த்தையில் இருநாடுகளுக்கும் இடையில் சிலமுக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


குறிப்பாக, வங்கதேசத்துக்கு 50 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியா வழங்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக் கிடையிலான நல்லுறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வ ...

இந்தியாவில் கூட்டுறவு துறையை வலுப்படுத்தி வருகிறோம்-மோடி பெருமிதம் '' இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம், '' ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...