பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அத்வானி உள்ளிட்டோர் மீதானவழக்கில் சுப்ரீம்கோர்ட் நேற்று புதிய உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அத்வானி உள்ளிட்ட கட்சியின் முக்கியதலைவர்களுடன் பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசி உள்ளார். அவர்களிடம், 'கட்சி உங்களுடன்இருக்கும்' என, அமித்ஷா ஆதரவுதெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்புவழக்கில் இருந்து அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 20 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்வழக்கை மீண்டும்விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையில் அத்வானி உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய பா.ஜ., தலைவர்களை கட்சிதலைவர் அமித்ஷா போனில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, இவ்வழக்கின் விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த உரையாடலின்போது, கட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும். அதனால் கலங்காமல், தைரியமாக அடுத்தகட்டபணிகளில் ஈடுபடுங்கள் என அமித்ஷா நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது. அமித்ஷா பேசியதற்கு பிறகு உமாபாரதி தனது அயோத்திபயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.