பாஜக என்பது ஒரு அமைப்பியக்கம்

தேசத்தை நேசிப்பவர்கள் இவரின் கருத்துகளை புறந்தள்ள இயலாது.. உண்மையும்கூட.. சத்தியமும்கூட .. #பெருமைக்கொள்கிறேன்! இவருடைய கருத்தை.. வழிமொழிகிறேன்!

நன்றி: Gopinath R

பாஜக என்பது கட்சியல்ல. வெறும் தேர்தல் வெற்றிகளை பெற்று அதிகாரத்திற்கு வருவது, அதன் மூலம் அடுத்த தேர்தலுக்கு செலவு செய்ய சம்பாதிப்பது. நடுவில் எது நடந்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் விடுவது, என்ற வகையில் நடக்கும் கட்சி அல்ல. இதை காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் ஒப்பிடுவதே தவறு. 

 

இது ஒரு அமைப்பியக்கம். இதில் பலதரப்பட்ட சித்தாந்தம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இது ஒற்றைப்படையான அமைப்பும் அல்ல. இங்கு சுதேசி சோசியலிச பொருளாதாரம் பேசும் குழுக்கள் இருக்கின்றன. காந்திய கிராம சுயராஜ்யம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். 

 

முதலாளித்துவ பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்பவர்கள் இருக்கிறார்கள். தீவிர ஹிந்துத்வம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். பொதுவாக சொல்ல வேண்டுமானால் பாரத நாட்டை கலை, பண்பாடு  இலக்கியம், பொருளாதார வளர்ச்சி, தன்னை தற்காத்துக்கொள்ளும் ராணுவ பலம், உலகத்தரமான உட்கட்டமைப்பு அதோடு இணைந்த இயற்கை வளம் என்ற அடிப்படையில் வளர்த்துக் கொண்டு செல்ல தங்கள் கருத்துக்களை தொடர்ந்து பொதுவெளியில் புகுத்திக்கொண்டும் முரண்பட்டு விவாதித்துக்கொண்டும் இருப்பார்கள். 

 

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான கோவிந்தாச்சார்யா அல்லது எஸ்.குருமூர்த்தி போன்றவர்கள் கொண்டிருக்கும் பொருளாதார கொள்கையே வேறு குருமூர்த்தி சுதேசி பொருளாதார கொள்கை கொண்டவர். ஆனால் அந்நிய முதலீட்டிற்கு எதிர்ப்பாளர் அல்ல. ஆனால் கோவிந்தாச்சார்யா போன்றவர்கள் அந்நிய முதலீடே கூடாது என்பார்கள். காங்கிரஸ் அரசிற்கும் பாஜக அரசிற்கும் பொருளாதார கொள்கையில் வித்யாசம் இல்லை. ஆகையால் இருகட்சிகளும் இணைந்து கூட தேர்தலை சந்திக்கலாம் என்று ஒருமுறை அவர் கிண்டலாக சொன்னார். இவர்கள் அனைவரும் இணையும் ஒரு புள்ளியில் தான் அரசு இயங்கும். தொடர் தேர்தல் வெற்றி அல்லது தோல்விகள் அவர்களில் வலுத்த ஒரு குழுவை மற்றவர்களை அரவணைத்து கொண்டே தங்கள் கருத்துக்களை கொள்கைகளை செயல்படுத்தும் உறுதியான இடத்தில் வைக்கிறது. அதனால் தான் அந்த இயக்கத்தில் தொடர் விவாதங்களும் சர்ச்சைகளும் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. இவை ஜனநாயகத்திற்கும் பொதுவாக இந்தியாவிற்கும் நல்லது அடுத்த 100 ஆண்டுகளுக்கு நாட்டை எந்த பாதையில் வழிநடத்துவது என்று இவை முடிவு செய்யும்..

அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி,யஸ்வந்த் சின்ஹா, சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்கள் ஒரு வகை என்றால் ஜஸ்வந்த் சிங்கும், அருண் ஷோரியும் வேறு வகையாக இருந்தார்கள்.இன்று அந்த கட்சியில் ஹிந்துத்வ முகங்களாயிருக்கும் வினய் கத்தியார், சஞ்சீவ் பால்யன் போன்றவர்கள் வேறு வகை. பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்றவற்றில் இருப்பவர்கள் பாஜகவிலும் இருப்பார்கள் அவர்கள் அதி தீவிர ஹிந்துத்வம் பேசுவார்கள். 

 

எல்லாவிதமான முரண்பட்ட கொள்கை உடையவர்களையும் கொண்டது தான் பாஜக. அங்கு நாத்திகர்களும் இருக்கிறார்கள். நாடு எல்லை போன்றவற்றை மறுக்கும்  தாராளமயவாத சிந்தனை கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உலகம் முழுதும் ஒரே தேசம் ஒரே மக்கள் என்று கூட பேசுவார்கள்.பாஜக ஆதரவாளர்களோ எதிர்ப்பாளர்களோ இதை புரிந்து கொள்வது நல்லது. 

 

இறுதி சித்தாந்தம் என்ற ஒன்று சங் பரிவார் அமைப்புகளில் இல்லை. அது தேசத்தின் உயர்வு என்ற ஒன்றை தவிர..

 

நானும் ஒரு பாஜக மற்றும் சங்க ஆதரவாளன் என்பதில் பெருமையே.

 

ஜெய் ஹிந்த் !!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...