திருடர்களை பிடிக்க கொள்ளைக்காரன்?

கொடுமையாக இல்லையா? மத்திய அரசு ஊழலை ஒழிக்க அவர்கள் சார்பாக பேச விலாஸ் ராவ் தேஷ்முக் கையும், சரத் பவாரையும் நியமித்துள்ளது…கொடுமையிலும் கொடுமை அல்லவா இது..திருடர்களை பிடிக்க கொள்ளை காரர்களை நியமிப்பது போலல்லவா உள்ளது

இத ஊழல் நம் நாட்டை விட்டு உண்மையிலேயே ஒழிந்து விடுமோ என்ற திகில் கலந்த ஏக்கம் நம் மக்களிடையே

கடந்த பத்து நாட்களில் காண முடிந்தது…ஆனால் அது தீராத ஏக்கமாக இருந்து விடுமோ என்ற பயமும் தற்போது எழுந்துள்ளது…..ஹசாரேயை மத்திய அரசு ஏமாற்றுகிறதா? அல்லது ஹசாறேயின் பின்புலத்தில் வேறு யாராவது இருந்து இயக்குகிறார்களா? அன்னா ஹசாறேயின் தியாகத்தை பார்த்தால் அவரை இயக்குவது யாராகினும் இருக்கட்டும் ..தனது உயிரை பணயம் வைத்து பொதுநலனுக்காக போராட தைரியம் /மனத்துணிவு /சொல்லொண்ணா ஆற்றல் வேண்டுமல்லாவா ?

இந்தியாவில் யாருக்காவது அந்த தைரியம் இதுவரை வந்ததில்லையே !…ஆனாலும் இந்த குழுவும் அந்த குழுவும் மாறி மாறி பேசுவது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தாமலில்லை … போராட்டம் …அதுவும் உயிரை பணயம் வைத்து போராடானும் என்று முடிவு எடுத்து விட்டால் //அதுவும் மக்களின் அமோக ஆதரவும் இருக்கும் பொது , இது தான் சான்ஸ் என்று ஆட்சி நீக்கம் வரை கூட போகலாமே ..

ஆனால் பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று போராட்டம் நீளும் பொது படித்தவர்களுக்கே இந்த போராட்டத்தின் திசை கொஞ்சம் புரிவது கடினமாக இருக்கிறது !…அப்படியிருக்க பாமரனுக்கு புரியாத புதிர்..இத்தகைய போராட்டங்கள் உணமையாக ஊழலுக்கு ஒரு தீர்வாக அமையுமா? அல்லது அரசின் பிரச்சினைகளை திசை திருப்பி , ஊழலுக்கு எதிராக நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் பார் பேர்வழி என்று மத்திய அரசு சப்பை கட்டும் ஒரு நிகழ்வாக இருக்குமா? ?

ஆங்கில சேனல்களில் ஊழலை எதிர்க்கிறோம் என்று டிவியில் பேசும் பாமர மக்கள் , ஏதோ அவர்கள் பாதிக்க பட்டதை மட்டும் நினைவு கூறுகிறார்கள்..சிலர் சொல்கிறார்கள்" நான் லோன் கேட்ட போது அதிகாரி கமிஷன் கேட்டார்"..இன்னொருவர் சொல்கிறார், " வேலை வாங்கி தர 1 லட்சம் கேட்டார்கள்.".இன்னொரு பெண் சொல்கிறார் " டாகடர்களுக்கு ஸ்கேன் சென்டரில் இருந்து கட்ஸ் வருகிறது என்று " ..உண்மையிலேயே ஊழல் என்பது அவ்வளவு தான் என்று மக்கள் நினைக்கிறார்களா? அல்லது ஊழல் என்பது அரசிடம் மட்டும் இல்லை ; மக்கள் தான் ஊழல் பண்ணுகிறார்கள் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்க படுகிறதா??

ஹசாரே தற்போது கேட்கிறார் " கடை நிலை ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் " என்று..அரசு சொல்கிறது, "அவர்கள் 40 லட்சம் பேர்..அத்தனை பேரையும் கண்காணிக்க முடியாது என்று?" எதற்காக இது? ஊழல் என்றால் அனைவரும் செய்ய கூடாது என்பது தானே? கடைநிலை ஊழியர்களை " என்ன குடியரசு தலைவரேவா நேரடியாக கண்காணிக்க வேண்டும்? .ஐநூறு பேரை கண்காணிக்க ஒருவர் போதாதா? அப்படிஎன்றால் 4000000 பேருக்கு மொத்தம் வெறும் 8000 அதிகாரிகள் போதுமே, இந்தியா முழுதும் கண்காணிக்க ! சாத்தியமில்லா ஒன்றா இது? 8000 பேருக்கு ஆளுக்கு 30000 சம்பளம் கொடுத்தாலே ஐந்து வருடம் ( 60 மாதங்களுக்கு ) கணக்கு பார்த்தால் வெறும் 1440 கோடி தான் வருகிறது..மத்திய அரசால் இதை கூடவா செய்ய முடியாது? நமது எம்பிக்கள் ( வெறும் 534 பேர் ) நம் மத்திய அரசு வழங்கும் சம்பளம் ஐந்து வருடங்களுக்கு எல்லா அலவன்சும் சேர்த்து 1630 கோடிகள்..

.ஆக ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைத்தால் மத்திய அரசு ஒரே நொடியில் கடைநிலை ஊழியர்களிடையே ஊழல் இல்லாமல் பண்ணி விடலாம்….பிரச்சினையே அரசுக்கு அங்கு தான்…இவர்களின் [கடைநிலை ஊழியர்களின் ]ஊழலான ஆயிரத்துக்கும் /இரண்டாயிரத்துக்கும் தடை போட்டால் , கொஞ்சம் மேலதிகாரிகளின் இருபதாயிரத்துக்கும் , முப்பதாயிரத்துக்கும் தடை விதித்தே ஆக வேண்டும்.. அதற்கும் மேலே இருக்கும் அதிகாரிகளின் லட்ஷங்களுக்கும் ஆப்பு வைத்தால், கான்றேக்டர்களின் மூலம் கிடைக்கும் கோடிகளுக்கு ஆப்பு ?

இடை தரகர்களின் மூலம் கிடைக்கும் பல நூறு கோடிகளுக்கு ஆப்பு..அப்புறம் காற்பறேட்களின் மூலம் கிடைக்கும் பல ஆயிரம் கோடிகளுக்கும் ஆப்பு? ! இந்த " சுருட்டல் சங்கிலி" கடைநிலை ஊழியர் தொடங்கி – கொஞ்சம் கிரேட் ஏறி ஏறி , அப்புறம் அரசு/போர்டு சேர்மன் வரை போகும்..அங்கிருந்து தனியாருக்கு , புரோக்கர்கள் மூலம் தாவும்.. தனியார் கான்றேக்டர்கள் யார்? அரசியல் வாதிகளின் பினாமிகள் அல்லது காற்பறேட்களின் பினாமிகள்…ஆக மொத்தம் அடிப்படை கட்டுமான வசதிகளை செய்து கொடுப்பதில் நடக்கும் ஊழல் மிக பெரிது…அது தான் நம் நாட்டையே வேரோடு சாய்க்கிறது…

உதாரணமாக, தற்போது நம் வீட்டு முன்பு போடப்படும் சாலைகளை பாருங்கள்… அதை போடும் கான்றேகடர்களிடம் பேச்சு கொடுத்தேன்…அவர்கள் சாலைகளுக்கு செலவழிப்பது 25 % சதம்..மற்றவர்களுக்கு கொடுக்கும் லஞ்சம் 25 % சதம்…தான் சுருட்டுவது 50 % சதம்…பின்பு திட்டம் போட்டே அந்த சாலைகளில் ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட் காரனும் ஏதாவது பள்ளம் தோண்டுவது போல பார்த்து கொள்கிறார்கள் ..அல்லது அப்படியே வெவ்வேறு டிப்பார்மேன்ட்களும் நடக்கிறது…ஐந்து வருடம் நீடிக்க வேண்டிய சாலை ஐந்தே மாதங்களில் அடுத்த டெண்டரை எதிர் நோக்குகிறது…யாருக்கு லாபம் இதில்? குழி விழுந்த சாலைகளில் பயணிக்கும் நமக்கு,

நமது பணத்திலேயே , முதுகு வலியை வாங்கி கொள்கிறோம்..எரிபொருள் விரயமாகிறது….மீண்டும் மீண்டும் மக்கள் வரிப்பணம் பாழாய் போகிறது…இது தான் காலம் காலமாய் நடக்கிறது…இந்தியா முழுதும் ஒரு நாளைக்கு எத்தனை சாலைகள், அரசு கட்டுமான வேலைகள் நடக்கிறது என்று பாருங்கள்….அங்கெல்லாம் தினமும் நடக்கும் மொத ஊழல்களை கணக்கிட்டால், ஒவ்வொரு நாளும் ஒட்டு மொத்தமாக ஒரு 2 G அளவுக்கான இழப்பு நடைபெறுகிறது..

2G யில் பணம் ஒரே இடத்தில் குவிந்தது…இங்கே ஊழல் பணம் பல இடங்களிலில் சிதறுவதால், நம் கண்களுக்கும் தெரியாமல் போகிறது… ஆனால் நம்மவர்களில் பலர் இன்றளவும் ஊழலுக்கும் /லஞ்சத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உள்ளனர்…. ஆங்கில சேனல்களில் பார்பவையும் சரி, நான் நேரடியாக பேசும் நண்பர்களிடமும் சரி – அவர்கள் சொல்வது எல்லாம் யார் யாரெல்லாம் தன்னிடம் லஞ்சம் வாங்கினார்கள் என்பது பற்றி தானே தவிர ,தனது கண் முன்னே இருக்கும் சாலை சரிவர போடா படாததை பற்றியோ, அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ஒதுக்கப்படும் பணம் வேறெங்கு போகுகிறது என்பதனை பற்றியோ யாரும் பேசவே மாட்டேன் என்கிறார்கள்…

ஹசார்யின் தியாகம் அளப்பரியது என்றாலும் அதன் நோக்கம் நிறைவேறுமா என்பது நிச்சயம் சந்தேகத்துக்கு உரியது…மத்திய அரசு, கடை நிலை ஊழியர்களை JLP யில் சேர்க்க மாட்டேன் என்று சொல்வது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது…! ஊழலை அடி மட்டத்தில் இருந்து ஒழித்தால், மேல் மட்டத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்ய முடியாது என்பது ஒரு காரணம்…மற்றொன்று இந்தியாவில் நிறைய பேர் , மக்களோடு மக்களாக ஊழல் செய்து தான் வருகின்றனர் , என்ற ஒரு பரவலான தோற்றத்தை இதன் மூலம் கொண்டு வருவது.

இந்த குழப்பத்தில் பெரும் பண முதலைகள் தப்பி விடும்..சுவிஸ் வங்கி கருப்பு பணம் / 2G / CWG / போன்றவை இன்னும் கொஞ்ச நாட்களில் எங்கேயோ கேட்ட குரல்களாக மறைந்து விடும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...