ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்

தஞ்சாவூரில் நேற்று மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்யாசோ நாயக் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு, ஜூன் 21ம் தேதி, உலகம் முழுவதும் யோகாநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனால், உலகளவில், 12 நாடுகளில் உள்ள பல்கலைகளில் ஆயுர் வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவை தொடர்பான ஆய்வு இருக்கை உருவாக்கப் பட்டுள்ளன.


ஆயுஷ் இயக்கத்தின்கீழ் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவங்களுக்கு டாக்டர்களை தனியாக நியமிக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளோம்.


இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் தேசியளவில் ஆரம்பசுகாதார நிலையங்களில், 4,000க்கும் அதிகமான சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு ஊதியம் வழங்கி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட சித்தா மருத்துவமனை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, 10.50 ரூபாய் கோடி நிதி வழங்கப் படவுள்ளது. இந்த மருத்துவமனைகளை மாநில அரசுகள் நடத்தும். இத்திட்டத்தில் கடந்த ஆண்டும், நிகழாண்டும், 100க்கும் அதிகமான மருத்துவ மனைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...