இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுக்கு இந்தியா சார்பில் இரண்டு சரித்திரப் புகழ்வாய்ந்த நினைவுப்பரிசுகளை பிரதமர்மோடி வழங்கியுள்ளார்.
1) 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த யூதர்களின் வரலாறு எழுதப்பட்ட இரண்டு செப்புத்தகடுகளை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த செப்புத் தகடுகள், 10ஆம் நூற்றாண்டில், யூதர்களின் தலைவனாக இருந்த ஜோஸஃப்ராபனுக்கு, தமிழக மன்னன் சேரமான்பெருமாள் என்ற அரசன் வழங்கியது என்றும், கேரளாவின் திருவல்லாவில் உள்ள தேவாலயத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
2)அதேபோல், தங்க முலாம் பூசப்பட்ட தோரா_மாலை மற்றும், கிரீடம் ஒன்றையும் இஸ்ரேல் பிரதமருக்கு மோடி வழங்கியுள்ளார்.
இத்தகைய அழகிய நினைவுப் பரிசுகளை வழங்க மட்டுமா அங்கே போனார் பிரதமர்? சும்மா உலகைச் சுற்றிப் பார்க்க மோடி செல்வதாக சில அறிவு ஜீவிகள் விமர்ஸித்து வருகிறார்கள்.இவர்களை பிரதீபா பாட்டி(ல்) பேரன்கள் என புறம் தள்ளி விட்டு உண்மை நிலையை காண்போம்..
**ஒவ்வோர் அயல்நாட்டு பயணத்திலும் தேஸத்திற்கு தேவையான விஷயங்களை பெறுவதை உறுதிப் படுத்தியே திரும்புகிறார் பிரதமர் மோடி.
இந்த பயணத்தின் பயன்தான் என்ன?
******************************************
இந்தியா – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த ஏழு_ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அதில் #விண்வெளி_ஆராய்ச்சித்_துறையில் ஒத்துழைப்பு தொடர்பான 3 ஒப்பந்தங்களும், நீர்வளத்_துறை சார்ந்த 2 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அதேபோல், விவஸாய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
நாட்டின் முதுகெலும்பான விவசாய வளத்தில் அதீத அக்கறை காட்டும் நோக்கமாக இந்த பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.தொடருங்கள் பிரதமரே வாழ்த்துக்கள்
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.