இந்திய ராணுவத்திடம் போதுமான அளவுக்கு வெடி மருந்துகள் கையிருப்பு உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது ஜெட்லி இவ்வாறு குறிப்பிட்டார். சிஏஜி எனப்படும் இந்தியகணக்கு தணிக்கைத் துறை கடந்த சிலநாட்களுக்கு முன் சமர்ப்பித்த அறிக்கையில், இந்திய ராணுவத்திடம் வெடிபொருள் பற்றாக் குறையாக இருப்பதாகவும், போர்க்காலங்களில் 10 நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது. ராணுவத்திடம் இருக்கவேண்டிய வெடிபொருளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு வெடிபொருள் பற்றாக்குறையாக இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்விஎழுப்பின. இதற்கு பதிலளித்த அருண்ஜெட்லி, சிஏஜி அறிக்கையில், குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெடிமருந்து பற்றாக்குறை பற்றி தெரிவிக்கப் பட்டுள்ளதாக கூறினார். மேலும் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் வாங்குவது தற்போது எளிதானது என குறிப்பிட்டுள்ள ஜெட்லி, ஆயுதங்கள்கொள்முதல் செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.