மத்திய அமைச்சரவையில் மிகவும் முக்கி யமான பதவியான பாதுகாப்புத் துறையானது நிர்மலா சீதாராமனுக்கு நேற்று வழங்கப் பட்டது. இந்தியாவின் மிகவும் முக்கியமான பொறுப்பானது இந்திராகாந்திக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஒருபெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா, இரண்டு முறை, ராணுவ அமைச்சகத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். ஆனால், ராணுவத்துக்கென தனியாக ஒரு பெண் அமைச்சர் நியமிக்கப் படுவது, இதுவே முதல் முறை. . இதன் மூலம், ராணுவத்துக்கான முதல் பெண் அமைச்சர் என்ற பெருமை அவரை சேர்கிறது.
நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமனின் தாய்வழிதாத்தா தமிழகத்தின் முசிறியை சேர்ந்தவர். திருச்சியில் 18-8-1959ல் பிறந்தார் நிர்மலா சீதாராமன். இவரது தந்தை சீதாராமன் திருச்சி ரயில்வேயில் பணியா ற்றினார். சேலம், சென்னை ஆகிய இடங்களுக்கு நிர்மலாவின் தந்தை சீதாராமன் இடம் மாறியதால் அவரதுகுடும்பமும் இடம்பெயர்ந்தது.
திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர் நிர்மலாசீதாராமன். பின்னர் டெல்லி ஜவகர்லால்நேரு பல்கலையில் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பை தொடர்ந்தார்.
ஆந்திராவை சேர்ந்த டாக்டர் பிரகலாத்பிரபாகர் என்பவரை மணந்து ஹைதரா பாத்துக்கு சென்றார். அதன்பின் டெல்லியில் நிர்மலா சீதாராமன் குடும்பம் குடியேறியது. இவர்களுக்கு ஒருமகள் இருக்கிறார்.
பாஜகவின் செய்தித்தொடர்பாளராக இருந்தார் நிர்மலா சீதாராமன். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சரானார். 2016-ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகியுள்ள முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன். இந்திரா காந்தி பிரதமர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் வைத்திருந்தார். ஆனால் முதல்முறையாக பாதுகாப்புததுறை ஏற்றுள்ள பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.