பா.ஜ.,வின் தேசியசெயற்குழு டில்லியில் நேற்று துவங்கி நடந்துவருகிறது. நிறைவு நாளான இன்று (செப்.,25) நடக்கும் கூட்டத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. பா.ஜ., செயற்குழு கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கூட்டத்தில் பேச துவங்கிய கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, துவக்கத்திலேயே காங்., துணைத்தலைவர் ராகுலை கடுமையாக தாக்கிப்பேசினார். அமித்ஷா பேசுகையில், அம்பானிகள், அபிஷேக் பச்சன் முதல் ஸ்டாலின், அகிலேஷ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாரிசு அரசியலுக்கு உதாரணம். இதுஇந்தியாவின் பாரம்பரியம் என ராகுல், நியூயார்க்கில் பேசி உள்ளார். அது காங்.,ன் கலாச்சாரம். இந்தியாவினுடையது அல்ல.
மோடி அரசு பிரிவினை வாதத்தை வளர்ப்பதாக பேசுகிறார். இந்திய அரசை பற்றி வெளிநாட்டில் சென்று விமர்சிப்பவர்கள் பற்றி கவலையில்லை. அவர்களுக்கு பா.ஜ.,வின் சாதனைகள் பதிலளிக்கும். காங்., ஆட்சியில் இருந்தபோது மிகப் பெரிய ஊழல்களை பார்த்துள்ளோம். தொலைத்தொடர்பு முதல் நிலக்கரி வரை அனைத்து அரசு துறைகளிலும் ஊழல். ஆனால் பா.ஜ.,வின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஒரு குற்றமோ, ஊழலோ கூற முடியாது என்றார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.