கிழக்கு கடற்கரைசாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதிதர மத்திய அரசு முன்வந்தும், அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
பாஜகவில் புதிதாக தொண்டர்கள் இணையும்விழா நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அகில பாரத பொதுச்செயலாளரும் பாஜக தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜ ஆட்சி அமையும்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து தொண்டர்கள் பாஜகவில் சேருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவுக்கு என்ன ஆனது என்று மக்களுக்கு மட்டுமல்ல, தொண்டர் களுக்கும் தெரியவில்லை. பிரதமர் மோடி குஜராத்தில் 3லட்சம் தடுப்பணைகள் கட்டியுள்ளார். ஆனால், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலன்கட்டிய கல்லணை மட்டுமே உள்ளது. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிசெய்த திமுக, அதிமுக ஒரு அணையைகூட கட்டவில்லை.
தமிழக வளர்ச்சிக்கு எந்த ஒருதிட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்வதற்காக மதிமுக, நாம் தமிழர் கட்சி போன்றவை உள்ளன. தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களில் இதுவரை எந்த ஒரு தொழிற்சாலையோ, வளர்ச்சித்திட்டங்களோ செயல்படுத்தப் படவில்லை.
கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதிதர மத்திய அரசு முன் வந்தும், அதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.