தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது என்றார் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் பாளையங் கோட்டை ஜவாஹர் திடலில் செவ்வாய்க்கிழமை (அக். 10) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் பாஜகவில் இணைவதோடு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜகவை வளர்க்க விஸ்தார் திட்டத்தின்கீழ் துரிதப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசின் 300-க்கும் மேற்பட்ட சிறந்ததிட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் பாஜக செல்வாக்கை அதிகரிக்க தொண்டர்கள் உழைக்கவேண்டும்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என திமுகவினர் கூறிவருகிறார்கள். ஆனால், பாஜக வளர்வதால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதற்றமடை கிறார்கள் என்பதே உண்மை. கங்கை, காவிரியைத் தொடர்ந்து தாமிரவருணியில் புஷ்கரணி நிகழ்ச்சி அடுத்தாண்டில் வரஉள்ளது. இதையொட்டி நதியை தூய்மைப்படுத்தவும், இங்கு வரும்பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார் அவர்.
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.