அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப் படங்களில் தவறான கருத்துகளைப் பரப்ப க்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார் தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப் படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார். '' ‘மெர்சல்' படத்தில் இருந்து ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்கா விட்டால், வழக்குத் தொடரப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
தமிழிசையைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணனும் 'மெர்சல்' படத்துக்கு எதிராக கருத்து தெரிவித் துள்ளார். நாகர் கோவிலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ’பிற நாட்டில் எப்படி வரி விதித்துள்ளார்கள் என்பது பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டின் சூழல் வேறு. பிற நாட்டின் சூழல் வேறு. நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், நேரடியாக வரட்டும். அதை விட்டுவிட்டு, திரைப்படங்களில் தவறான அரசியல் கருத்துகளைப் பரப்பக்கூடாது.
’சோ’-வும் அரசியல் தொடர்பான திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை, ரசிக்கும்படி இருக்கும். அவர் விமர்சிக்கும் அரசியல் வாதிகளே அந்த விமர்சனங்களை ரசிப்பார்கள். அவரின் விமர் சனங்களில் நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி இருக்கும்.தவறான கண்ணோ ட்டத்தில் விமர்சிக்க க்கூடாது. வரி விதிப்புகள் பற்றி உண்மைக்கு மாறாக உள்ள வசனங்களைத் திரைப் படத்தில் இருந்து சம்பந்தப் பட்டவர்கள் நீக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்..
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.