2004 ம் ஆண்டு மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை உண்டானது.காரணம் நரசிம்ம ராவ் ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக பெறுப்பேற்ற மன்மோகன் சிங் சிறப்பாக செயல்பட்டார். தாரளமய மற்றும் உலகமயக் கொள்கை அப்போது தான் இந்தியாவில் அறிமுகமானது! அதன் விளைவாக நாம் கண்ட பொருளாதார மாற்றங்கள் மகத்தானவை.
எல்லா கொள்கைகளையும் அரைகுறையாக அமலாக்குவது இந்திய அரசியலின் பலவீனம் அதனால் தாராளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையின் பின்விளைவாக பணக்காரர்களும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து என்றாலும் பொருளாதார வளர்ச்சி சிறப்பானது! இந்த மாற்றங்களுக்கு மன்மோகன்சிங் முக்கிய காரணம்!
அதனால் 2004 ல் மன்மோகன் சிங் பிரதமராக பதவி ஏற்ற போது புதிய நம்பிக்கை பிறந்தது.
ஆனால் அந்த நம்பிக்கை வேகமாக பொய்த்துப் போது! காரணம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார் ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி தனி அமைச்சரவை இயக்கியது.அவரது அமைச்சரவை என் ஜீ ஓ காரர்களை கொண்டதாக இருந்தது.
மன்மோகன் சிங் எடுத்துக்க முயன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை தடுப்பதாவும் என் ஜீ ஓக்கள் நினைப்பதை திணிப்பதாகவும் சோனியா காந்தி தலைமையிலான குழு இருந்தது.
இந்த போக்கு 2004-2009 ஆட்சியிலேயே துவங்கி விட்டது.2G, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட ஊழல்களும் அப்போதே அரங்கேறி விட்டன. ஜெயலலிதா முதலமைச்சராக தொடர முடியாமல் போகும் நேரங்களில் ஓ.பன்னீர் செல்வம் பதவியில் அமர்ந்தார்.இது இடைக்கால ஏற்பாடு.
முதலமைச்சராக பன்னீர் செல்வம் இருந்தாலும் ஜெயலலிதா தான் ஆட்சி நடத்தினார்.
இதைப் போல தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார்.ஆட்சியை சோனியா காந்தி நடத்தினார்.
ஒரே வித்தியாசம் மன்மோகன் சிங் இடைக்கால ஏற்பாடாக பதவி வகிக்க வில்லை அவ்வளவுதான்! இப்போது நினைத்துப் பார்த்தால் மன்மோகன் சிங்கை பன்னீர்செல்வத்துடன் ஒப்பிட்டு பேசி வந்தது தவறு என்று தோன்றுகிறது. ஆமாம் இந்த ஒப்பீட்டின் மூலம் பன்னீர் செல்வத்தை அவமதித்ததாக தோன்றுகிறது!
நன்றி வசந்தன் பெருமாள்
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.