பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் மூலம் மகளிருக்கு இலவச எரி வாயு வழங்கும் விழா நேற்று திருப்பூரில் நடை பெற்றது. விழாவில் பாஜக-வின் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், `பிரதமரையும், பாஜகவையும் தமிழகத்தில் பலர் தொடர்ந்து விமர்சனம்செய்தாலும் மக்களிடத்தில் அவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. முத்ரா வங்கித்திட்டத்தின் மூலமாக வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள 53 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விபத்துக்காப்பீட்டு திட்டத்தை 1 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் செயல்படுத்தியுள்ளோம்.
வறுமைக் கோட்டிற்கு கீழேவாழ்கின்ற 5 கோடி மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க பாஜக ஆட்சியில் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. இது போன்ற மக்கள் நல நடவடிக்கைகளின் மூலமாக, இந்தியாவில் பிரபலமானவர்களில் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி முன்னணியில் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆட்சிகளில் மீனவர் நலன் பாதுகாக்கப்பட வில்லை. ஆனால் பா.ஜ.க.வின் ஆட்சியில் தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். கடற்படை தமிழக மீனவர்களைக் காயப் படுத்தியதாக தகவல் அறிந்தவுடன் பாஜக சார்பில் வருத்தமும் தெரிவிக்கப் பட்டது. மேலும் அது தொடர்பாக பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது' என்றார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.