ஐந்தாவது ‘உலக இணையவெளி’ மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

ஐந்தாவது 'உலக இணையவெளி' மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி தில்லி ஏரோசிட்டி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

பொருளாதார மற்றும் வளர்ச்சிசார்ந்த ஒத்துழைப்புகளுக்காக 97 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஒஈசிடி கூட்டமைப்பு 2011-ஆம் ஆண்டு லண்டனில் அமைக்கப் பட்டுள்ளது. இதுவரை நான்கு சர்வதேச மாநாடுகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்தகூட்டமைப்பின் சார்பில் சைபர் குற்றங்கள், சைபர் வெளிபாதுகாப்பு தொடர்பான 'உலக இணையவெளி' மாநாடு முதன் முறையாக தில்லியில் உள்ள ஏரோசிட்டி வளாகத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுகிறது.

மாநாட்டில், இலங்கை பிரதமர் ரணில்விக்கிரம சிங்க உட்பட 31 நாடுகளில் இருந்து 124 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் 33 அமைச்சர்கள் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், தொழில் வல்லுனர்கள், சைபர்நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள். உலகளாவிய இணையக் கொள்கையில் உள்ளுணர்வு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பது, தனியார் துறையினருக்கும் தொழில் நுட்பத்துறையினருக்கும் வெளியில்பாதுகாப்பு அளிப்பது ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக இருக்கும். சர்வதேச அளவில் சைபர் குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்தமாநாடு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள். 

பிரதமர் மோடி தொடங்கிவைக்கும் இம்மாநாட்டில், மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக்கும் முயற்சியாக இந்தமாநாட்டை இந்தியா இந்த ஆண்டு முன்னெடுத்து நடத்துகிறது. இந்தியாவை வலிமையான டிஜிட்டல் அதிகாரம்படைத்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...