பாலாறு – கோதாவரி நதிகள் இணைப்பு

பாலாறு – கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை சமாளி க்கவும், மழைக்காலங்களில், வெள்ளப் பெருக்கால் ஏற்படும்பேரழிவை தடுக்கவும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 5.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் நடக்க உள்ளன. முதற் கட்டமாக, உ.பி., – ம.பி., மாநிலங்களுக்கு இடையேபாயும் நதிகள் இணைக்கப்பட உள்ளன. அதன்பின், நாடுமுழுவதும் உள்ள முக்கிய நதிகள் இணைக்கப்பட உள்ளன.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் பாலாறு, ஆந்திராவழியாக பயணித்து, தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடலில்கலக்கிறது. இந்த ஆறு, தமிழகத்தில் மட்டும், 222 கி.மீ., பயணிப்பதால், வேலுார், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.

பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு, 15க்கும் ,மேற்பட்ட தடுப்ப ணைகளை கட்டி உள்ளதால் தமிழகத்தில் பயணிக்கும் பாலாற்றில், நீரோட்டம் பாதிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில், மத்திய அரசின் நிதி யுதவியுடன், ஆந்திராவில் கிருஷ்ணா – கோதாவரி நதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், கோதாவரியில் வீணாகும் நீர், கிருஷ்ணா ஆற்றிற்கு திருப்பி விடப் பட்டுள்ளது.

அதேபோல, கோதாவரி நதியுடன், பாலாற்றையும் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை, தமிழகத்தில் எழுந்துள்ளது. இவ்வாறு இணைப்பதால், ஆற்றிலும் ஆண்டுமுழுவதும், நீரோட்டம் இருக்கும்.இந்ததிட்டத்திற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கவேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையேற்று, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, மத்திய அரசின் பங்களிப்பு, 90 சதவீதம்; மாநிலஅரசின் பங்களிப்பு, 10 சதவீதம். மாநில அரசு, தன் பங்களிப்பை தர தயாராக உள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து,

திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நதிகள் இணைப்பு தொடர்பாக, டிசம்பரில், டில்லியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், அறிக் கையை தாக்கல்செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, சாத்தியக் கூறு அறிக்கை தயாரிப்புபணிகளை, விரைவில் துவக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் என்கவுன்டர்களை கு ...

தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும் L. முருகன் கருத்து 'தமிழகத்தில் என்கவுன்டர்களை குறைக்க வேண்டும். துப்பாக்கியை வைத்து சட்டம் ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலை ...

பென் நெவிஸ் சிகரம் ஏறி பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாதனை ஸ்காட்லாந்தில் பென் நெவிஸ் சிகரம் மீதேறி பா.ஜ., மாநில ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் கு ...

ஒரே பதவி ஒரே பென்சன் திட்டம் குறித்து ராணுவ வீரர்களிடம் காங்கிரஸ் பொய் கூறுகிறது பிரதமர் மோடி பேச்சு '' ஒரே பதவி, ஒரே பென்சன் திட்டம் குறித்து ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களி ...

7 ஆண்டுகளில் இருமடங்கான பெண்களின் சக்தி மண்டோலியா பெருமிதம் கடந்த 7 ஆண்டுகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை இருமடங்கு ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அர ...

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா 'காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,' என ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த ...

அரசியல் என்ற வார்த்தையின் அர்த்தம் மாறிவிட்டது நிதின் கட்கரி கருத்து  ''ஒரு காலத்தில் அரசியல் என்றால், மக்கள் சேவை, நாட்டை ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...