நாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும்

நாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும் என குஜராத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

குஜராத் மாநில சட்டப்  பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்த முள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு, டிசம்பர் 9-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவானவாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப் படுகிறது.

இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மோர்பி நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது, ஷோலே இந்தி திரைப்பட வில்லன்பெயரில் ‘கப்பர் சிங் வரி’ என ஜிஎஸ்டி பற்றி ராகுல்காந்தி விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

''குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் படவில்லை. மாநிலத்தின் குடி நீர் தேவைக்காக கைபம்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. இதையே மிகப் பெரிய சாதனையாக காங்கிரஸ் கூறுகிறது.

ஆனால் குஜராத் மாநிலத்தின் பலபகுதி மக்களும் பயன்பெறும் வகையில் நர்மதாதிட்டத்தை செயல் படுத்தியது பாஜக அரசுதான். மத்தியிலும் மாநிலத்திலும் மிகமோசமான முறையில் ஆட்சி நடத்திய காங்கிரஸுக்கு ஊழலை பற்றி பேசத் தகுதிஇல்லை. நாட்டை சூறையாடி யவர்களால் தான் கொள்ளையைப் பற்றி சிந்திக்க முடியும்'' எனக்கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.