பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 15-ம் தேதி தொடங்கி அடுத்தஆண்டு ஜனவரி 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து சிறிது இடைவெளிக்குபிறகு ஜனவரி 30-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அன்றைய தினம் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுகிறார். மறுநாள் (ஜனவரி 31-ந்தேதி) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப் படுகிறது.
இதனையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதிமந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். இதை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதால், இந்த பொதுபட்ஜெட் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தாக்கல்செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் ஆகும்.
வரி விகிதம் குறித்து அருண் ஜெட்லி தலைமையிலான ஜ.எஸ்.டி. கவுன்சில் அவ்வப்போது கூடி முடிவு செய்வதால் பட்ஜெட்டில் மறைமுக வரிவிதிப்பு தொடர்பாக அறிவிப்புகள் இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். அதேநேரம் வருமான வரி, கார்ப்பரேட் நிறுவன வரி உள்ளிட்ட நேரடி வரி விதிப்பு பற்றிய அறிவிப்பு இடம் பெறும்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதி நாளில் பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்செய்வது வழக்கமாக இருந்தது. இதனால் நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் பட்ஜெட்டை அமல்படுத்துவதில் சிரமம் இருந்துவந்தது.
இதையடுத்து அருண் ஜெட்லி முதல் முறையாக இந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இதுதவிர ரெயில்வே துறைக்கு தனியாக ஒருபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதையும் மாற்றி ஒரேபட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்பிறகு முதல் முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.