ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டதும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
பா.ஜனதா சார்பில் கடந்ததேர்தலில் போட்டியிட்ட கங்கை அமரன் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் போட்டியிட வில்லை. அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் பா.ஜனதா வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டது.
இந்த நிலையில் ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிடாதது ஏன்? என்பது குறித்து கங்கைஅமரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் எனக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். இப்போது உடல் நிலை தேறிவருகிறது. உடல் நலகுறைவு காரணமாகவே இந்த முறை ஆர்.கே.நகரில் போட்டியிட வில்லை.
பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். அவர் துடிப்பானவர். ஆர்.கே.நகர் மக்கள் அவருக்கு வாக்களித்து பா.ஜனதாவை வெற்றிபெற செய்ய வேண்டும். பா.ஜனதா அங்கு வெற்றி பெற்றால் அது தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். ஆர்.கே.நகர் தொகுதி மத்திய அரசு ஆதரவுடன் வளர்ச்சிபெறும்.
இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.