நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் ரஜினி அரசியல் பிரவேசம்

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக் கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6வது நாளாக, நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, போட்டோ எடுத்து வருகிறார். இன்றும் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.


முன்னதாக ரசிகர்களிடம் பேசிய ரஜினி, ரசிகர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. ரசிகர்கள் கட்டுப்பாடுடன், அமைதியாக போட்டோ எடுத்துசென்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கட்டுப்பாடு மட்டும் இருந்தால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் பில்டப் கொடுக்கவில்லை. தானாக பில்டப் கொடுக்கப்பட்டது. எனக்கு அரசியலுக்கு வருவது பற்றிய பயம்இல்லை. மீடியாக்களை பார்த்துதான் பயம். பெரிய பெரியா ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள். நான் ஒருகுழந்தை. எப்படி பயப்படாமல் இருக்க முடியும். நான் எதைபேசினாலும் அதை விவாதம் ஆக்கி விடுகிறார்கள். பத்திரிக்கையாளர் சோ இருந்திருந்தால் எனக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும்.

நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக் கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்குமுன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. அதை நான் நினைத்துகூட பார்க்காத அளவிற்கு பலமடங்கு நீங்கள் ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டீர்கள். பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை. அப்படி நான் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் 1994 லேயே என்னை தேடி வந்தது. அப்போது வரதா பதவி ஆசை, 68 வயதில் எனக்கு வருமா? அப்படி ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். நான் ஆன்மிகவாதி என சொல்லிக்கொள்ள தகுதி இல்லாதவன்.

அரசியல் மிகவும் கெட்டுவிட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுபோய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்தசில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலை குனிய வைத்துவிட்டது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரிக்கிறார்கள். இப்போது நான் என்னை வாழவைத்த தெய்வங்களான மக்களுக்க நல்லது செய்யவேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறேன். அப்போதும் நான் வரவில்லை என்றால் என்னை வாழவைத்த மக்களுக்கு நல்லது செய்ய வில்லை என்ற குற்ற உணர்வு நான் சாகும்வரை எனக்குள் இருந்து கொண்டே இருக்கும்.


அனைத்தையும் மாற்றவேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டுவர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என்கூட இருக்க வேண்டும். அரசியல் கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவது சாதாரண விஷயம் இல்லை. நடுக் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்றது. கடவுள் அருள், மக்களின் நம்பிக்கை, அபிமானம், ஆதரவு, அன்பு இருந்தால் சாதிக்கமுடியும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசர்கள் அடுத்த நாட்டின் கஜானாவை கொள்ளை அடித்தார்கள். இப்போது ஜனநாயத்தின் பெயரால் ஆட்சிக்கு வருபவர்கள் சொந்த நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள். சிஸ்டத்தை மாற்றனும். எனக்கு தொண்டர்கள் வேணாம். காவலர்கள் வேணும். அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைந்தால் அரசிடம் இருந்து மக்களுக்கு சேர வேண்டிய திட்டங்களை, சலுகைகள் சேர செய்யும் காவலர்கள். யார் தப்பு செய்தாலும் தட்டிக் கேட்டும் காவலர்கள் வேணும். அவர்களை கண்காணிக்கும் பிரஜையின் கண்காணிப்பாளர் தான் நான்.


பதிவுசெய்யப்படாத மன்றங்களை ஒருங்கிணைக்கனும். ஒவ்வொரு பகுதியிலும் நமதுமன்றம் இருக்கனும். கட்டுப்பாடு, ஒழுக்கம்தேவை. தயாராகும் வரை நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேசவேண்டாம். யாரையும் விமர்சனம் செய்யவேண்டாம். அறிக்கை விடவும், போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர். மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெறுவோம். பிறகு நாம் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என கூறிவோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் 3 ஆண்டுகளில் நாமே பதவியை ராஜினாமா செய்து விட்டு போவோம்.

உண்மை, உழைப்பு உயர்வுதான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும். இவ்வாறு ரஜினி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...