16 மாநிலங்களில் காலியாகும் 58 எம்.பி.க்கள் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக.,வின் பலம் வரும் ஏப்ரல்மாதத்தில் இருந்து மாநிலங்களவையில் அதிகரிக்கும்.
ஏற்கனவே மக்களவையில் பெரும்பான்மையுடன் பாஜக செயல் பட்டு வருகிறது. மாநிலங்களவையிலும் பாஜகவின் பலம் அதிகரிக்கும் நிலையில், அடுத்துவரும் மழைக்கால கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ள முத்தலாக்மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களையும் எளிதாக நிறைவேற்றும் வலிமை பாஜகவுக்கு கிடைக்கும்.
மாநிலங்களவை எம்.பி.க்கள் 58 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவடைவதையடுத்து, அதற்கான தேர்தலை கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 3 நியமன எம்.பி.க்கள், ஒருசுயேட்சை எம்.பி.பதவியும் அடங்கும்.
உத்தரப்பிரதேசத்தில் 10 எம்.பி.க்கள், மஹாராஷ்டிராவில் 6 இடங்கள், பீகாரில் 6 இடங்கள், மத்தியப்பிரதேசத்தில் 5 இடங்கள், மேற்கு வங்காளத்தில் 5, குஜராத்தில் 4 இடங்களும் காலியாகின்றன.
இதில் உத்தரப் பிரதேசத்தில் அசுர பலத்துடன் பாஜக திகழ்வதால், 10 எம்.பி.க்களில் 8 இடங்களை உறுதியாக கைப்பற்றும். மஹாராஷ்டிராவில் 3 இடங்கள் கிடைக்கும், ஒருஇடம் சிவசேனாவுக்கும், 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கலாம். அதேபோல பீகாரில் 3 இடங்கலும், மத்தியப் பிரதேசத்தில் 4 இடங்களும், குஜராத்தில் 2 இடங்களும் பாஜகவுக்கு உறுதியாகக் கிடைக்கும்.
அதேசமயம், காங்கிரஸ்கட்சிக்கு குஜராத்தில் 2 எம்.பி.க்கள், மஹாராஷ்டிராவில் ஒருஇடம், கர்நாடகவில் 3, மத்தியப்பிரதேசத்தில் ஒன்று என 7 இடங்கள் கிடைக்கலாம்.
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் மார்ச் 5ம் தேதி தொடங்கி, 12-ம் தேதி முடிகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெற 15-ம்தேதி கடைசிநாளாகும்.
தற்போது 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்துவருவதால், இந்த தேர்தலில் பாஜகவுக்கே அதிகமான எம்பி.க்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தற்போது மாநிலங்களவையில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கை 123ல் இருந்து 115 ஆக குறையும். அதேசமயம், பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகளின் பலம் 100 லிருந்து, 109 ஆக உயரும்.
தற்போது காலியாகும் 58 எம்.பி.க்களில் 3 நியமன எம்பி.க்கள் தவிர்த்து 30 எம்.பி.க்கள் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 24 பேர் பாஜக கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்கள். பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடந்து வருவதால், பாஜகவுக்கே அதிகமான எம்.பி.க்கள் பதவி கிடைக்கும், மாநிலங்களவையில் அதன் பலம் அதிகரிக்கும்.
குறிப்பாக உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகமான எம்.பி.க்கள் பாஜகவுக்கு கிடைக்கும்.
பீகார் மாநிலத்தில் ஒரு இடத்தையும், குஜராத்தில் 2 இடத்தை பாஜக இழந்தாலும், உத்தரப்பிரேதசத்தில் 10 எம்.பி.க்களுக்கான இடத்தில் 8 எம்.பி.க்களை கைப்பற்றும். மீதமுள்ள இரு இடத்துக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகியகட்சிகள் கடுமையாக மோதிக் கொள்ளும். மேலும், உத்தரகாண்டில் ஒரு இடம் பாஜகவுக்கு கிடைக்கும்.
இதனால், காங்கிரஸ் கட்சியின் தனிப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 57லிருந்து 48ஆக குறையும். கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையும் 72 லிருந்து 63 ஆகக் குறையும்.
பீகார் மாநிலத்தைப் பொருத்தவரை 11 எம்.பி.க்களுக்கான இடத்தில் 10 இடங்களை பாஜகவும், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் கைப்பற்றும் எனத்தெரிகிறது. 2 இடங்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு சென்றாலும்கூட ஒன்றுமுதல் 2 இடங்களுக்கு கடும்போட்டி இருக்கும் என்பதால், அதிலும் ஆளும் கட்சியை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது.
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.