காங்கிரஸுடன் தொடர்பு: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஊழியர் வாக்குமூலம்

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற இணைய ஆய்வுநிறுவனம், தேர்தலின் போது மக்களின் வாக்குகளை மாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் அந்தநிறுவனம் கூட்டணி வைத்திருந்ததாக அதன் ஊழியர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் இயங்கிவந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா, அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பணியாற்றியது. ஒரு ஆப் மூலம் பொதுமக்களின் அபிமானங்களை அறிந்து கொள்ளும் போர்வையில், அவர்களது பேஸ்புக் கணக்கில் இருந்து தனிப்பட்ட விவரங்களை சேகரித்து அதன் மூலம், இணைய விளம்பரங்கள் உருவாக்கி டிஜிட்டல் தேர்தல்பிரச்சாரம் செய்துள்ளது. தனது ஆப் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல், அவர்களது நண்பர்கள் சுமார் 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளின் விவரங்களையும் சட்டவிரோதமாக சேகரித்ததாக அந்நிறுவனத்தில் பணியாற்றிய கிறிஸ்டோபர் வைலி தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் வெற்றிக்கு இந்தநிறுவனம் மிகப்பெரிய பங்காற்றியதாக கருதப்படும் நிலையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பணியாற்றியதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. பேஸ்புக்மீது பிரிட்டன் அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி அந்நிறுவனத்துடன் கூட்டு வைத்திருந்ததாக பாரதிய ஜனதாவும், பாரதிய ஜனதா கூட்டு வைத்திருந்ததாக காங்கிரஸ்கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தன. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்காவின் இந்திய கிளை நிறுவனம் ஒவ்லெனோ, காங்கிரஸ் மற்றும் பா.ஜ கட்சிகளை தனது வாடிக்கை யாளர்களாக காட்டிக் கொண்டது, மேலும் பல கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், கிறிஸ்டோபர் வைலி, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். அப்போது அவர், கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா, எந்தநாட்டின் சட்டத்தையும் பின்பற்றுவதில்லை என்றும், ஜெயிப்பதை மட்டுமே குறிக்கோளாககொண்டு பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பணியாற்றிய தாகவும் தெரிவித்தார். மேலும், பல மாநில கட்சிகளும் தங்களது சேவைகளை உபயோகப் படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ்சின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா பற்றி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...