பா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒவ்வொரு மாநிலமும் 2 பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா ஏற்கமறுத்தது. கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கமும் ஏற்கமறுத்து 23ம் தேதி எழுத்துப் பூர்வமாக தெரிவித்தது.
பிரதி நிதிகளை நியமிக்காமல் வாரியமோ, குழுவோ நியமிக்க முடியாது. மாநில அரசாங்கங்கள் முரண்டு பிடிப்பதால் அடுத்து எப்படி செயல் படலாம் என உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளோம். தீர்ப்பை நடை முறைப்படுத்த இன்றிலிருந்து 90 நாட்கள் கேட்கவில்லை. தீர்ப்புகொடுத்த தேதியில் இருந்து 90 நாட்கள் கேட்டுள்ளோம்.
44 வருடங்களாக தமிழ்நாட்டை ஏமாற்றி யவர்கள், வஞ்சித்தவர்கள், மத்திய அரசு அவகாசம் கேட்டதற்கு இவ்வளவு கூத்தடிப்பதா? மக்களை ஏமாற்றுவதா? கலவரம் ஏற்படுத்தமுயற்சி செய்வதா? பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. நாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனையா?
நியூட்ரினோ திட்டத்திற்கும் தற்போதுள்ள பாஜக அரசுக்கும் தொடர்பு இல்லை. ஸ்டெர்லைட் திட்டமானது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தமிழ்நாட்டுக்கு அறிந்தேசெய்த துரோகம்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.