அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப் படவில்லை எனவும் பல்கலை கழகத்தை காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம் எனவும் பாஜக.,வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்தார்.
துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க ஸ்டாலின் , பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு தங்களது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். அதில் காவிரி ப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில், கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த. சூரப்பாவை நியமிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல எனவும் தமிழகத்தைசேர்ந்த ஒருவருக்கு கூடவா திறமையில்லை எனவும் கேள்வியெழுப் பியுள்ளனர். மேலும் பலர், கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக திறமையாக காய் நகர்த்துவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.கவின் நிறுவன நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கொடியேற்றினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திறமை அடிப்படையிலேயே துணைவேந்தர் நியமனம் நடை பெற்றுள்ளது எனவும் தகுதியான சூரப்பாவின் நியமனத்தை அண்ணா பல்கலையின் ஆசிரியர் கூட்டமைப்பே வரவேற்றுள்ளது எனவும் இதில் அரசியலை புகுத்தாதீர்கள் எனவும்தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் காவிரி பாய்ந்தோடத்தான் போகிறது என்பதில் மாற்றமில்லை எனவும் இன்னும் ஒருசில வாரங்களில் தமிழக உரிமையை பாஜக மீட்டெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.