ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார் , தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை

சென்னையில் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் துரோகம்செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. தமிழகத்திற்கு காவிரிநீரை கொண்டுவரப் போவது பாரதீய ஜனதா கட்சிதான்.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு கால அவகாசம் தேவைப் படும், அதுவரையில் ஸ்டாலின் சிறையில்தான் இருக்கவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் என்பதில் இடையூறாக இருக்கும் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை ஸ்டாலின் எதிர்க்காதது ஏன்? பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புகொடி காட்டுவோம் என கூறும் ஸ்டாலின்தான் தமிழின துரோகியாவார். பிரதமர் மோடியால் தான் காவிரி தமிழகத்தில் பாயப் போகிறது என்றார். 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத் துறையினர் தரப்பில் இன்று நடைபெற்ற மவுனப்போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசுகையில், ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்றார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிஉள்ள தமிழிசை, ராணுவத்திற்கு பயப்படாதவர், ஐடி வந்தால் எப்படி பயப்படுவார் என்பதுதெரியும் என குறிப்பிட்டு உள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாகபேசிய தமிழிசை, 40 வருடங்களுக்கு முன்னதாக உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் எப்படி இருந்து இருப்பீர்கள் என கேள்வியை முன்வைத்துள்ளார். திரிபுராவில் காவி ஆட்சியை பிடித்தது போன்று தமிழகத்திலும் காவி ஆட்சியை பிடிக்கும் என கூறிஉள்ளார் தமிழிசை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...