பொருளாதார குற்றவழக்குகளில் தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல்செய்ய அவசர சட்டம்

கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லைய்யா பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு வங்கிகளில் கடனாகபெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டில் தஞ்சம் அடைந் துள்ளார்.

சமீபத்தில் பஞ்சாப்நேஷனல் வங்கி முறைகேட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடிசெய்த நிரவ் மோடி உள்ளிட்ட பிரபல தொழிலதிபர்கள் போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். ஐ.பி.எல்.கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஊழல்செய்து பல கோடி ரூபாய் கொள்ளையடித்த லலித்மோடி போன்றோரும் இந்திய அரசின் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து வெளி நாடுகளில் பதுங்கி உள்ளனர்.

அவர்களை இந்தியாவுக்கு அழைத்துவந்து, விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை நீடித்து வருகின்றது. மேலும், இவர்களுக்கு எல்லாம் சொந்தமாக உள்நாட்டில் உள்ள சொத்துகளை பறிமுதல்செய்வதிலும் பல்வேறு சட்டச்சிக்கல்கள் தடைக்கற்களாக இருந்து வருகின்றன.

இதை எல்லாம் தகர்த்து பொருளாதார குற்றவழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறை வானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வகைசெய்யும் மசோதா கடந்த மாதம் 12-ம் தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டது.

ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கிப் போட்டதால் இந்தமசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்றாக பொருளாதார குற்ற வழக்குகளில் சிக்கி தப்பியோடி தலைமறை வானவர்களின் சொத்துகளை பறிமுதல்செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதை தொடர்ந்து, இந்த அவசர சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகின்றது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவாக அறிமுகப்படுத்தி, சட்டமாக நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றபின்னர் இந்த அவசர சட்டத்துக்கு முழு உயிர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...