கருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை

உங்களுக்கு நான் கொடுக்கும் தகவல் மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே இணையத்தில் தேடி இந்த தகவல்களை ஊர்ஜித படுத்திக்கொள்ளலாம்… … …

  • இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தேங்கி இருக்கும் இந்திய மக்களின் கருப்பு பணத்தை மீட்க, நடவடிக்கைகள் எடுக்க ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்குமாறு (Special Investigation Team ) உச்ச நீதிமன்றம் 2011 லேயே உத்தரவிட்டது.
  • அந்த உத்தரவை செயல்படுத்தாமல் இன்று நேர்மையாளர்களை போல பேசும் மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் 2014 வரை கிடப்பில் போட்டார்கள். திரு மோடி அவர்கள் பிரதமரான பிறகு போட்ட முதல் கையெழுத்து இதுதான்… … …

ஆமாம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைத்தது … … …

  • இதற்கு பிறகு படிப்படியாக தகவல்கள் சேகரித்து வந்தது. பிறகு 2016ல், தாமாக முன்வந்து வரி பாக்கியை செலுத்துங்கள், வெறும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிடுகிறோம், நாங்களாக பிடித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று எச்சரித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார் மோடி.
  • அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு தாமாக முன்வந்து வரி காட்டினார் பல பணக்காரர்கள். அதன் அடிப்படையில் இந்திய அரசுக்கு ரூ. 73,920 கோடிகள் வரி கிடைத்தது.

அதாவது அவ்வளவு கருப்பு பணம் அழிக்க பட்டது.

  • ஆனால் வாய்ப்பு கொடுத்ததும் பலர் திருந்தவில்லை. ஆகையால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக demonetization பாய்ந்தது. இதனால் வங்கிகளுக்கு வராத பணம் என்னவோ 16,000 கோடிகள் தான்.
  • ஆனால் ஏதோ 16,000 கோடிகள் மட்டுமே கருப்பு பணம் அழிக்கப்பட்டதாக பரப்பப்படும் விஷயம் ஒரு பெரும் பொய்…
  • பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டாலே அது வெள்ளை பணமாக மாறிவிட்டது என்கிற தகவல் மிகவும் தவறானது. ஏனென்றால் அந்த பணத்திற்கு அதன் சொந்தக்காரர் கணக்கு காண்பிக்க வேண்டும்.
  • இந்திய மக்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு பெரிய லாபம் கிடைக்க துவங்கி உள்ளது. ஆமாம். Demonetization க்கு பிறகு செய்யப்பட Raidகளினால் கிட்டத்தட்ட மட்டுமே ரூ.25,000 கோடிகள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.
  • மொத்தம் பிரதமர் மோடியின் முதல் மூன்றாண்டுகளில் ரூ. 1.37 லட்சம் கோடிகள் வருமானவரித்துறை raid மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது…
  • இப்பொழுது இந்த Demonetization மூலம் , கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு மேல் போலி நிறுவனங்கள் (shell companies) கண்டுபிடிக்கப்பட்டன. இது ஏழைகளின் நிறுவனங்கள் இல்லை.
  • பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் நிறுவனங்கள்

அவை அனைத்தையும் தடை செய்து, அதின் முதலாளிகளை மற்ற நிறுவனங்களுக்கு தலைமை தாங்க தடை செய்தது.

  • அதில் சில முக்கியமான புள்ளிகள் சசிகலா, முன்னாள் காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி போன்றவர்கள். இப்பொழுது இந்த நிறுவனங்கள் டெபாசிட் செய்யப்பட தொகை ரூ. 37,500 கோடிகள்
  • இந்த பணத்தை உரிமை கோரி யாரும் வரவேயில்லை ஆகையால் இந்த பணமும் இப்பொழுது அரசாங்கத்துக்கு போகிறது.
  • இதை தவிர, மேலும் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 3 லட்சம் கோடிகளுக்கு ஒழுங்காக கணக்கு காண்பிக்கவில்லை. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.
  • இதுவும் அரசாங்கத்திற்கு வரப்போகும் பணம். ஆனால் இதுவரை பிரதமர் மோடியால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.

1,37,000 கோடிகள் (ரெய்டுகள் மூலம்) + 16,000 கோடிகள் (வங்கிக்கு வராத பணம்) + 73,920 கோடிகள் (Voluntary disclosure ) + 37,500 கோடிகள் – மொத்தம் 2,64,020 கோடிகள்.

மேலும் 3 லட்சம் கோடிகள் இதில் சேர வாய்ப்புள்ளது.

  • இதை தவிர, ஆதாருடன் மானியங்களுடன் இணைத்ததில் அரசாங்கம் சேமித்த பணம் (இடைத்தரகர்கள் வாங்கும் கமிஷன்களை தவிர்த்ததனால்) 85,000 கோடிகள்
  • Make in India மூலம், வெளிநாடுகளிலிருந்து இந்திய ராணுவத்திற்கு ஆயுதங்கள் இறக்குமதியை குறைத்து, உள்ளூரில் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தியதான் சேமித்த பணம் 1 லட்சம் கோடிகள்.
  • இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. இதெல்லாம் யார் பணம்? நம்முடைய பணம். இந்த பணமெல்லாம் இப்பொழுது எங்கே என்று கேட்கலாம். எந்த அரசும் நேரடியாக பணத்தை கொடுத்து மக்களை சோம்பேறியாக்காது.
  • மாறாக தொழில் முதலீடுகள், உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உண்டாக்கும். அப்படி செய்ததால்தான் இந்த முத்திரா திட்டத்தின் கீழ் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிகிறது.
  • இன்னும் பல இடங்களில் புதிய சாலைகள் அமைப்பது, மின்சார வசதி ஏற்படுத்தி தருவது போன்ற விஷயங்களை செய்ய முடிகிறது. இந்திய அரசு ஏற்கனவே பற்றாக்குறை பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது..
  • மோடி வந்த பொழுது பட்ஜெட்டில் இருந்த பற்றாக்குறை 4.5 % ஆக இருந்தது.அது இப்பொழுது 3.3 % ஆக குறைந்திருக்கிறது.

இதனால் நமக்கென்ன நன்மை?

  • இந்திய அரசாங்கம் மேலும் கடன் வாங்குவது, ரூபாய் நோட்டடிப்பது குறையும். இதனால் விலைவாசியும் உயராது.
  • காங்கிரஸ் அரசின் கீழ் லட்சம் கோடிகள் ஊழல்களைத்தான் கேள்விப்பட்டு இருக்கிறோம், இப்பொழுது லட்சக்கணக்கான கோடிகள் மக்கள் பணம் மிச்சமாவதை பார்க்கிறோம். இதற்கு பெயர்தான் நல்ல நிர்வாகம் மக்களே.

இதன் பலன் உங்களுக்கு தெரிய இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

  • ஆனால் நம் தேசம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி. ஊடகங்களின் போலி செய்திகளையும், மீம்ஸ் பக்கங்களையும் நம்பி உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள்.
  • உண்மைகளை விவரமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு உண்மையாகவே இந்தியாவின் மீது அக்கறை இருந்தால் இதை சாமானியருக்கு புரியவையுங்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...