கர்நாடகதேர்தல் தொடர்பாக அங்கு பாஜக தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கட்சித் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆகியோர் தீவிரமாக பிரசாரம்செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக உறுப்பினர்களிடைய கர்நாடக தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, நமோ செயலி மூலமாக பேசியதாவது:
ஜனநாயகத்தில் எவ்வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக்கூடாது. வன்முறை காரணமாக கர்நாடகத்தில் பாஜக தொண்டர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வுகாண வேண்டும், மாறாக வன்முறையை நாடக்கூடாது.
இங்கு ஏற்பட்டுள்ள பாஜக தொண்டர்கள் மீதான வன்முறைக்கு பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக இளைஞர் அமைப்பு உறுப்பினர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எதிர்கட்சியான காங்கிரஸ் ஆதார் முதல் மிண்ணனு வாக்கு இயந்திரம்வரை அனைத்துக்கும் எதிர்ப்புதெரிவித்து வருகிறது. ஆனால், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினை பாஜக ஊக்குவித்துவருகிறது.
கர்நாடக தேர்தல் மீதான மக்களின் ஈடுபாட்டைக் கண்டு நான் வியக்கிறேன். இங்குள்ள அனைத்து மக்கள் பிரச்னைகளின் அடிப்படைதேவைகள் முதல் பாஜக தொடர்ந்து போராடிவருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மைக்கு முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம்தான் முக்கியகாரணம். தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க பாஜக முழுகவனம் செலுத்திவருகிறது என்று தெரிவித்தார்.
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.