ஜி.எஸ்.டி.யால் ஏழை, நடுத்தரமக்களுக்கு மிகவும் தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்து ள்ளதாக பாஜக. தேசியசெயலாளா் ஹெச்.ராஜா தொிவித்துள்ளாா்.
பாஜக. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா நேற்று காரைக்குடியில் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா்கூறுகையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக. அரசு தனது 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அரசு மீது தினம் ஒருஊழல் புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது எதிா்க் கட்சிகள் கூட குற்றம் சாட்ட முடியாத வகையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஏழை, நடுத்தர குடும்பங்களை சோ்ந்த மக்களுக்கு மிகவும் அவசியமான அத்தியாவசிய பொருள்களின் விலை ஜிஎஸ்டி.யால் குறைந்துள்ளது. மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றோரின் நிா்வாகத்தில் பருப்புவகைகள் ரூ.200 என்ற விகிதத்தில் இருந்தது.
ஆனால் தற்போது ஜி.எஸ்.டி.யால் பருப்புவகைகளின் விலை ரூ.60 முதல் 80 வரை விலை குறைந்துள்ளது. ஏழை, எளியமக்களுக்கு பா.ஜ.க. அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. காவிாியில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் துரோகம் இழைத்துவந்தன. தற்போது காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும் கா்நாடகா அரசு சாா்பில் பிரதிநிதிகளை நியமிக்காத குமாரசாமிக்கு ஸ்டாலின் ஆதரவுதொிவிப்பது தமிழா்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என குற்றம் சாட்டியுள்ளாா்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.