டிஜிட்டல் இந்தியாவின் பயன்பாடு அனைவருக்கு மானது

டிஜிட்டல் இந்தியாவின் பயன்பாடு அனைவருக்கு மானது. அதிலும் குறிப்பாக கிராமப் புறங்களுக்கானது என்று பிரதமர் நரேந்திரமோடி, வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி, பொதுசேவை மையத்தின் வாயிலாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் செயல்படும் வணிகம்சார்ந்து பல்வேறு தரப்பினருடன் நேரில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டிஜிட்டல் இந்தியா திட்டம் அனைவருக்குமானது, குறிப்பாக கிராமப்புறமக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் அதிகளவில் பயனடைந்தால் அதுவேமகிழ்ச்சியானது.

தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ரயில் பயணச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மின்னணு முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. தொழில் நுட்பத்தை அனைவரும் செயல் படுத்தும் விதமாக மாற்றி, அனைவரும் எளியமுறையில் அனைத்தையும் பெறுவதுதான் இதன் முக்கியவெற்றி.

மேலும் மின்னணு முறை பணப்பரிவர்த்தனைகளால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளது. அனைவரின் லாபமும் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

வருகிற ஜூன் 20-ஆம்தேதி இதேபோன்று பொது சேவை மையத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 50 முதல் 100 விவசாயிகளிடம் கலந்துரையாட திட்டமிட்டுள்ளேன். அப்போது விவசாயம்தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளேன் என்றார்.

 

இந்த பணிகள் குறித்து பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பிரத்யேக ஸ்கிரீன் அமைக்கப்பட்டு டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இதைப்போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களும் ஆன்லைன் மூலமாக இணைக்கப்பட்டிருந்தன.

நெல்லை மாவட்டத்தில் இருந்து பொதுச்சேவை மையம் மூலமாக பயன்பெற்ற பயனாளிகள் 5 பேர் மற்றும் பணபரிவர்த்தனைகளை தெரிந்து கொண்ட கிராம மக்கள் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கிராம மக்களிடம் உரையாடினார். அப்போது அவர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் மக்கள் எந்தளவுக்கு பயன் பெற்றுள்ளனர், பொதுச் சேவை மையம் மக்களுக்கு எந்தளவு பயனுடையதாக உள்ளது என்பது பற்றி பேசினார். 15 நிமிடம் இந்த உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

எனினும் கிராம மக்கள் யாரும் பிரதமரிடம் கான்பிரன்ஸ் மூலமாக பேசவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச்சேவை மைய மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் வினோத் குரியாகோஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக அவர் கூறும்போது, நெல்லை மாவட்டத்தில் 212 இடங்களில் பொதுச்சேவை மையங்கள் உள்ளன. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச்சேவை மையம் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக அனைத்து சான்றிதழ்களையும் வழங்கி வருகிறோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக் ...

அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் நிராகரித்து விட்டனர் –  மோடி  'பார்லியில் மக்களுக்காக என்றுமே காங்., பேசியதில்லை. அதிகாரப் பசி ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக் ...

சிட்டுக்குடுவிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – மோடி “நாட்டில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள ...

தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு  'என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...