"சத்ரபதி சிவாஜியை போன்ற ஒருவர் மீண்டும் பிறக்கவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள், ஆனால் அவர்களது குடும்பங்களில் இல்லை, யாரும் தியாகிகளாக இருக்க விரும்பு வதில்லை. பொது வாழ்க்கையில் வர விரும்புபவர்கள் சத்ரபதி சிவாஜியைப்போல இருக்க வேண்டும்.
சமூக அக்கறையோடு செயல்படவேண்டுமென நினைப்பவர்கள், எப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என இப்புத்தகத்தில் சிறப்பாக சொல்லப் பட்டுள்ளது.
சிறந்த தலைவர்களின் பிறந்த நாள, மறைந்த நாளை அனுசரிப்பதை காட்டிலும் அவர்கள் சென்ற பாதையில் இளைஞர்கள் நடக்கவேண்டும். ஆர்எஸ்எஸ் தொண்டர் நா.கிருஷ்ணப்பா என்பவரின் வாழ்க்கை வரலாற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட காலம் முதல் அந்த இயக்கத்தின் பாதையையும் இந்நூல் பேசியுள்ளது'' என மோகன்பக்வத் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.