மக்களவை தேர்தல் அடுத்தஆண்டு நடைபெறவுள்ளதால் பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஒத்தி வைக்கபடுகிறது. இதனால் பாஜக தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.
பாஜகவின் இரண்டு நாள் தேசியசெயற்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் அமித்ஷா கூட்டத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசியதாவது:
‘‘பாஜக மேக்கிங் இந்தியாவை உருவாக்குகிறது. ஆனால் காங்கிரஸ் இந்தியாவை பிரேக்கிங் செய்கிறது. 2014-ம் ஆண்டு மக்களவைதேர்தலை விடவும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், கூடுதலான தொகுதியில் பாஜக வெற்றிபெறும்.
நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பாஜக ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மக்களிடம் ஆதரவு உள்ளது.
பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மெகாகூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. எதிர் கட்சிகளை மக்கள் முற்றிலமாக நிராகரிப்பார்கள்’’ எனக் கூறினார்.
இந்த கூட்டத்தில் நாளை முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. பாஜக நிர்வாகிகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. கட்சித் தலைவர் அமித்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் புதியநிர்வாகிகள் தேர்தலை ஓராண்டுக்கு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அமித் ஷா உள்ளிட்டோரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இதற்கான தீர்மானம் நாளை நிறைவேற்றப்பட உள்ளது.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.