திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்

விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையத்தில் பா.ஜ.க மாநிலசெயற்குழு கூட்டம் நாளை (23-ந் தேதி) நடக்க உள்ளது. இதில் பங்கேற்க மதுரைவந்த பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டாலின் பாசி‌ஷ பா.ஜ.க ஒழிக என்று கூறுகிறார். அவரதுகட்சியினர் கள்ளத் துப்பாக்கி, பிரியானி கடையில் பிரச்சினை, அழகுநிலையம், பேன்சி கடை போன்ற இடங்களில் பிரச்சினை அடாவடிசெய்து வருகிறார்கள்.

பண மதிப்பீடு இந்தியாவை செம்மைப் படுத்தி இருக்கிறது. தி.மு.க.வால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை அசைக்க முடியவில்லை. பாஜக.வை என்னசெய்ய முடியும்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்.

தமிழகத்தில் எந்ததேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், படை பலம் இல்லாமல் தேர்தல் நடந்தால் நல்லது. நேர்மையான தேர்தல் நடத்தவேண்டும் என்பதே எனதுவிருப்பம். பாஜக. அரசு பெட்ரோல் விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிசெய்து வருகிறது.

ஊழல் புகாரில் முதல்வர், துணை முதல்வர், மந்திரிகள் யாராக இருந்தாலும் வழக்குகளை சந்திக் கட்டும். இலங்கைத் தமிழர்கள் கொல்லப் பட்டதில் தி.மு.க. முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை தமிழர்கள் கொல்லப் பட்டிருக்க மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நாடகமாடி உள்ளது.

இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

One response to “திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்தாலும், திருவாரூர் இடைத்தேர்தல் வந்தாலும், பா.ஜ.க. போட்டியிட தான் விருப்பம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.