சபரிமலைக்கு செல்வேன் என அடம்பிடித்து வந்த 2 பெண்களில் ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறிஸ்துவத்தை சேர்ந்தவர் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சமீபத்தில் நான் 2 முறை சபரி மலைக்கு சென்றேன். சபரி மலைக்கு ஏறிசெல்ல 2 பெண்கள் முற்பட்டனர். ஒருவர் முஸ்லிம் மற்றொருவர் கிறிஸ்துவம். இவர்கள் ஐயப்பன் மீது உள்ள பாசத்திலோ, அவரைகாண வேண்டும் என்ற அக்கறையிலோ செல்லவில்லை. சபரிமலையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கமாகவே அவ்வாறு செயல் பட்டுள்னர் என தெரிகிறது. இதனை ஏற்றுகொள்ள முடியாது.
நாட்டில் ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் தேவை அது நல்லவையாக இருக்கவேண்டும். கேரளமக்கள் மனிதநேயத்தை போற்றுபவர்கள். யாரோ சிலர் செய்யும் தவறுகள் துரதிருஷ்டமானது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.