பண மதிப்பிழப்பு அமல்படுத்தபட்டதன் 2 ம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இதனை எதிர்த்து காங்., பல்வேறு போராட்டங்கள் நடத்திவருகிறது. இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் காந்தி – நேரு குடும்பத்தின் 4 தலை முறை சொத்து பாதிக்கப் பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புபணம் தொலைந்ததால் எதிர்க்கட்சியான காங்., அதிருப்தியில் உள்ளது.
கருப்புபணத்தை கட்டுப்படுத்த நினைக்கும் மோடி தலைமையிலான அரசுக்கும், அதனை பாதுகாக்க நினைக்கும் காங்., தலைவருக்கும் இடையே இந்திய அரசியலில் பெரியபோர் நடந்து வருகிறது. ராகுலின் பேச்சில் பொய்யை தவிர ஏதும் இல்லை. பலகாலமாக ஒரேவிஷயத்தை அவர் பேசி வருகிறார். காந்தி குடும்பம் விட்டு சென்ற பிறகு, மோடி ஆட்சியின் கீழ் இந்தியா முன்னேறி வருகிறது என்றார்.
பண மதிப்பிழப்பு திட்டமிட்ட சதி எனவும், மோடியின் நண்பர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்காகவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை என ராகுல் கூறியிருந்த குற்றச்சாட்டுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த சம்பித் பத்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.