பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற திட்டம்போடும் முன்னர், தங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவியுங்கள் என காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வெளியேற்ற எதிர் கட்சிகள் வியூகம்வகுத்து வருகின்றன. இதில் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று டில்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்வரும் 2019 மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸை விமர்சனம் செய்துள்ளது.
பாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வார்கியா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர்,”எங்களை எதிர்த்துப்போட்டியிட கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதை பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால், முதலில் அவர்கள் தங்கள் பிரதமர்வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவிக்கட்டும். அதன் பின்னர், போட்டியிட்டு எங்களை வெளியேற்றுவது குறித்து கனவுகாணட்டும்” என்று கிண்டல் அடித்துள்ளார்.
”எங்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இருக்கிறார். அவர்களது பிரதமர் வேட்பாளர் யார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்
மம்தா பானர்ஜியை சாடிய மூத்த பாஜக தலைவர் முகுல் ராய்,”1998 ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் தோற்றுவித்த போது, காங்கிரஸ் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தங்களுக்கு அரசியல் விரோதிகள் என மம்தா பானர்ஜியும் அவரது கட்சியினரும் தெரிவித்தனர். இப்போது அவர்கள் உங்கள் நண்பர்களாக மாறியுள் ளனரா” என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.