மணிப்பூரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரேன் சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், நேற்று, முக்கியத்துவம் வாய்ந்த, எட்டு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். உணவு பதப்படுத்தும் கிடங்கு, நீர் பாசன திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளிட்டவை, பிரதமரால் துவக்கப்பட்டன.
அப்போது, மோடி பேசியதாவது: மணிப்பூரில், 125 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவெறும், சோதனை சாவடி மட்டுமல்ல; இதில், அதிநவீன அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் சுற்றுலா வளாகம், ஒருங்கிணைந்த சுற்றுலாதலம், நீர்பாசன திட்டம் ஆகியவையும் துவக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களால் மக்களின் வாழ்க்கைமுறை மிகவும் சுலபமாக மாறும். குறிப்பாக, குழந்தைகளும் விவசாயிகளும் பலனடைவார்கள். முந்தைய மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போட்டப்பட்டிருந்தன. தங்களுக்கும் டெல்லிக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பதாக மக்கள் கருதிவந்தனர். எங்கள் ஆட்சியில் இந்த தூரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மணிப்பூரில் உள்ள கடைக்கோடி கிராமம்வரை மின்சாரவசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம். டெல்லி தங்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ளதாக மக்கள் நினைக்கும் வகையில் எங்கள் பணிகள் விரைவாக இருக்கும்.
பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளேன். நாடுமுழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்யும்போது அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதிகரித்துவருவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.